மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டினை டவுன்லோட் செய்யும் வழிமுறை

மொபைல் நமபர் இல்லாமல் ஆதார் கார்ட்டை பதிவிறக்கும் எளிய வழிமுறையை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

ஆதார் அட்டை அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, பான் அட்டை, யு,ஏ.என் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சேர்ப்பது கட்டாயம் ஆகும். அதே போல, அரசு வேலைகளுக்கும் ஆதார் கட்டாயம் ஆகும்.

அத்தகைய முக்கிய தகவல்களை கொண்ட ஆதாரை, அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் இல்லாமல் ஆன்லைனின் பதிவிறக்க முடியும் என்பது தான் உண்மை.

மொபைல் நமபர் இல்லாமல் ஆதார் கார்ட்டை பதிவிறக்கும் எளிய வழிமுறை

 • முதலில் UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://uidai.gov.in/ க்குச் செல்ல வேண்டும்
 • அதில் ‘மை ஆதார்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 • மை ஆதார் மெனுவில் ‘Order Aadhaar PVC Card என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
 • இப்பொது உங்கள் 12 இலக்க ஆதார் எண் / Unique Identification Number வழங்க வேண்டும்
 • பின்னர், captcha code-ஐ பதிவிட வேண்டும்
 • அடுத்து ‘My Mobile number is not registered’ என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
 • இப்போது உங்கள் மாற்று எண்ணை பதிவிட்டு, send otp கிளிக் செய்ய வேண்டும்.
 • பின்னர், மொபைலுக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட வேண்டும்.
 • பின்னர் terms and condition (விதிமுறைகள் மற்றும் நிபந்தனை) செக்பாக்ஸை கிளிக் செய்யவும்
 • இப்போது Submit (சமர்ப்பி) பட்டனை கிளிக் செய்ததும், ஆதார் அட்டையை ரீபிரிண்ட் செய்ய மேலதிக சரிபார்ப்புக்காக Preview Aadhaar Letter திரையில் தோன்றும்.
 • மீண்டும் ஒருமுறை அதனை சரிபார்த்துவிட்டு, பணத்தை ஆன்லைனில் செலுத்த make payment ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும். பேமண்ட் முடிந்ததும், ஆதார் டவுன்லோடு செய்வதற்கான ஆப்ஷன் திரையில் தோன்றும்.

மேலும், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SRN எண் வரும். அதன்பிறகு தபாலில் உங்களுக்கு ஆதார் கார்டும் வந்துவிடும்.

நீங்கள் 12 இலக்க ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 இலக்க Virtual Identification Number / VID-ஐ பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Download aadhar card without registered mobile number

Next Story
7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express