தடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்

Drones for vaccines: ICMR seeks bids, Telangana explores ‘Medicines from Sky’: ஃபிளிப்கார்ட் மற்றும் டன்சோவுடன் இணைந்து ட்ரோன் மூலம் தடுப்பூசிகளை விநியோகிக்க தெலுங்கானா அரசு திட்டம்

தடுப்பூசிகளை சாலை வழியாக கொண்டு செல்ல முடியாத பகுதிகளுக்கு ட்ரோன்கள் மூலம் கொண்டு செல்ல, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒருபுறம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்க ட்ரோன் ஆபரேட்டர்களிடம் ஏல நடவடிக்கையை தொடங்கியுள்ளது; மறுபுறம், தெலுங்கானா அரசு மருத்துவப் பொருட்களின் விநியோக சாத்தியத்தை சரிபார்க்க ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தளவாட அனுபவமுள்ள நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் டன்ஸோ, தெலுங்கானாவின் ட்ரோன் விநியோக திட்டத்தின் கீழ் தடுப்பூசி விநியோகங்களை ட்ரோன் மூலம் உருவாக்கி செயல்படுத்துவதற்காக தங்கள் கூட்டமைப்பை அறிவித்துள்ளன.

எச்.எல்.எல் இன்ஃப்ரா டெக் சர்வீசஸ் ஐ.சி.எம்.ஆரிடம் ஜூன் 11 அளித்த டெண்டர் ஆவணத்தின்படி, தேர்தெடுக்கப்பட்ட இடங்களின் தடுப்பூசி விநியோகத்திற்காக, அந்த “கடினமான” நிலப்பரப்புகளின் கடைசி மைல் தூரத்தை உறுதி செய்வதற்கான “சாத்தியமான” மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளில்லா வான்வழி வாகனங்களை (யுஏவி) பயன்படுத்தி தடுப்பூசிகளை வழங்க ஐஐடி-கான்பூருடன்  நடத்தப்பட்ட ஆய்வின் “வெற்றிகரமான” ஆரம்ப முடிவுகள் இதற்கு தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், தடுப்பூசி விநியோகத்திற்கான பி.வி.எல்.ஓ.எஸ் நடவடிக்கைகளின் சாத்தியக்கூறு குறித்த, ஐ.சி.எம்.ஆர்- ஐ.ஐ.டி-கான்பூரின் ஆய்வுக்காக நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளித்தது. இந்த ஆய்வின் அனுபவத்தின் அடிப்படையில், ஐ.சி.எம்.ஆர்,  யு.ஏ.வி.களை பார்வைக் கோட்டிற்கு (பி.வி.எல்.ஓ.எஸ்) அப்பால் இயக்க முடியும் என்றும் “குறைந்தபட்ச” உயரமான 100 மீட்டர் உயரத்தில் 35 கி.மீ தூரம் வரை செல்ல முடியும் என்றும் கண்டறிந்தது.

இந்த ட்ரோன்கள் குறைந்தபட்சம் 4 கிலோ எடையுள்ள சுமைகளை சுமக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் மற்றும் டிஜிசிஏ மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பாதுகாப்பு மற்றும் எடை தரங்களை பின்பற்ற வேண்டும். பாராசூட் அடிப்படையிலான விநியோகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என்பதை மேற்கண்ட சாத்தியக்கூறு ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. எவ்வாறாயினும், சோதனைக்குரிய பி.வி.எல்.ஓ.எஸ் நடவடிக்கைகளுக்காக அமைச்சகம் 20 கூட்டமைப்புகளை தேர்வு செய்துள்ள நிலையில், இதுவரை எந்த நிறுவனமும் இதற்கான நடவடிக்கைகளை முடிக்கவில்லை. தற்போதைய விதிகளின் ட்ரோன் ஆபரேட்டர்கள் தங்கள் யுஏவிகளை பார்வைக்கு வரும் தூரத்தில் மட்டுமே பறக்கச் செய்ய முடியும்.

ஸ்பைஸ்ஜெட், டன்சோ ஏர் கன்சோர்டியம், ஸ்கைலர்க் ட்ரோன்ஸ் & ஸ்விக்கி, கிளியர்ஸ்கி விமான கூட்டமைப்பு, த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் மற்றும் வர்ஜீனியா டெக் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ட்ரோன் விநியோகத்திற்கு தயாராகி வருகின்றன.

ஐ.சி.எம்.ஆருக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய விலக்கின் அடிப்படையில், தடுப்பூசி விநியோகத்திற்கான சாத்தியக்கூறுகளை சோதிக்க ட்ரோன் நடவடிக்கைகளை அனுமதிக்க பி.வி.எல்.ஓ.எஸ் கட்டுப்பாடுகளிலிருந்து தெலுங்கானாவிற்கும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. தொழில்துறை நிர்வாகிகள் பி.வி.எல்.ஓ.எஸ் உடன், ட்ரோன் செயல்பாடுகள் அதிக செலவு குறைந்தவையாக இருப்பதால், இவற்றை குறைந்த பொருளாதாரத்தில் நிறைவேற்ற முடியும் என்று கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் ட்ரோன் விமானிகளையும் விநியோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம், அதே நேரத்தில் யு.ஏ.வி கள் வேறு பிராந்தியத்தில் இயக்கலாம். குறிப்பாக சரியான நேரத்தில் விநியோகம் செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தெலுங்கானா அரசாங்கத்தின் ‘ஸ்கை ப்ராஜெக்ட்ஸில் இருந்து மருந்துகள்’ என்ற முயற்சியில் பங்கேற்பதை அறிவிக்கும் அறிக்கையில், பிளிப்கார்ட் கூறியதாவது, “கூட்டமைப்பின் ஒரு பகுதியாக, பிளிப்கார்ட் அதன் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட விநியோகச் சங்கிலியிலிருந்து பெறப்பட்ட கற்றல்களை ட்ரோன்களை நிலைநிறுத்தவும், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கவும் உதவும் என்று கூறியது.

மேலும், “இந்த தொழில்நுட்பங்களின் கலவையானது, தடுப்பூசிகளை விரைவாக வழங்குவதற்கு சாலை உள்கட்டமைப்பு உகந்ததாக இல்லாத, மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் பி.வி.எல்.ஓ.எஸ் மூலம் விநியோகங்களை நடத்துவதற்கு பயன்படுத்தப்படும். அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அளவுருக்களையும் மனதில் வைத்து ஆயிரக்கணக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்காக சோதனை ஆறு நாட்களுக்கு நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, ”என்றும் பிளிப்கார்ட் கூறியுள்ளது.

‘ஸ்கையில் இருந்து மருந்துகள்’ திட்டம் உலக பொருளாதார மன்றம் மற்றும் ஹெல்த்நெட் குளோபல் லிமிடெட் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் ட்ரோன் விநியோகத்திற்கான தேவைகள் மற்றும் திட்டங்களை எவ்வாறு மதிப்பிடுவது என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. கடைசி மைல் விநியோகத்திற்காக ட்ரோன்களை செயல்படுத்த தெலுங்கானா இந்த கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது மற்றும் அவற்றை மாநிலத்தின் சுகாதார விநியோக சங்கிலியில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Drones for vaccines icmr seeks bids telangana explores medicines from sky

Next Story
இதை செய்யவில்லை என்றால் உங்களின் வங்கி சேவைகள் முடக்கப்படும் – எச்சரிக்கும் ஆர்.பி.ஐ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com