DSP Gold ETF Fund of Fund | Gold bullion bonds| DSP Mutual Fund | டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் டிஎஸ்பி கோல்டு ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (திட்டம்) டிஎஸ்பி கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டில் (இடிஎஃப்) முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த டிஎஸ்பி கோல்டு இடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (DSP Gold ETF Fund of Fund) புதிய நிதிச் சலுகை இன்று நவம்பர் 3, 2023 அன்று சந்தாவிற்குத் திறக்கப்பட்டு நவம்பர் 10, 2023 அன்று நிறைவடைகிறது.
இது குறித்து, டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், தயாரிப்புகள் தலைவர் அனில் கெலானி, “பொதுவான ஈக்விட்டி டெட்ஹவி போர்ட்ஃபோலியோவிற்கு தங்கம் ஒரு சிறந்த கூடுதலாகும். திட்ட அமைப்பு உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துவதற்கும், தங்கத்தை தானாகக் குவிப்பதற்கும் வசதியான வழியை வழங்குகிறது” என்றார்.
உலகளாவிய பணப்புழக்கம் வறண்டு போவதாலும், மத்திய வங்கிகளின் தேவை அதிகரிப்பதாலும், உலோக விநியோகம் தேக்கமடைவதாலும் தங்கம் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
டாலரில் பலவீனம் இருக்கும் நேரத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகள் பொதுவாக சிறப்பாகச் செயல்படுகின்றன. மேலும், இது ஈக்விட்டியிலிருந்து விலகிச் செல்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைகிறது.
இதுமட்டுமின்றி, எந்தவொரு லாக்-இன் காலமும் இல்லாமல் யூனிட்களை மீட்டெடுக்கும் நெகிழ்வுத்தன்மையுடன் SIPகள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான முறையான வழியை வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“