scorecardresearch

ஸ்டைலிஷ் பைக்.. விலையை உயர்த்தும் டுகாட்டி.. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பா!

டுகாட்டி மோட்டார்சைக்கிளின் அனைத்து வகை மாடல்களும் இனி இந்தியாவில் கிடைக்கும்.

Ducati India to hike price of all its motorcycles
விலையை உயர்த்தும் டுகாட்டி!

இளைஞர்களின் கனவு இரு சக்கர வாகனமான டுகாட்டி நிறுவன பைக்குகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் விலை உயருகின்றன.
எனினும் எவ்வளவு விலை உயர்கிறது என்பது குறித்த சரியான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. இந்தப் புதிய விலை உயர்வு ஹைதராபாத், புனே, கொல்கத்தா, சென்னை மற்றும் கொச்சி என நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், வோல்ஸ்வோகன், கியா, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ரினால்ட், டோர்க் எலக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்தும் இதேபோன்ற திட்டத்தை அறிவித்துள்ளன.
இந்தப் பட்டியலில் தற்போது டுகாட்டி இந்தியாவும் இணைந்துள்ளது.

மற்ற உற்பத்தியாளர்களைப் போலவே, டுகாட்டி இந்தியாவும் அதிகரித்து வரும் உள்ளீட்டு விலைகள், மூலப்பொருட்கள், தளவாடங்கள் மற்றும் உற்பத்திச் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வுக்கு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், டுகாட்டி இந்தியா மூன்று புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Ducati india to hike price of all its motorcycles

Best of Express