இ-ஆதார் அட்டை பதிவிறக்கம்: மின்னனு ஆதார் அட்டையில் உள்ள 10 புதிய அம்சங்கள்

E-Aadhaar download, password: இ ஆதாரில் ஆதார் உடமையாளரின் புகைப்படம் சற்று பெரிதாக இடம்பெற்றிருக்கும். பெரிய புகைப்படம் மூலமாக அந்த தனிநபரை சிறந்த முறையில் பார்க்க முடியும்.

By: Updated: March 5, 2020, 01:00:35 PM

E-Aadhaar Card download: மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, சிறந்த தரமான படம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இவை தான் புதிய பதிவிறக்கம் செய்யப்பட்ட அல்லது இ ஆதார் அட்டையில் உள்ள முக்கிய அம்சங்கள். இந்திய தனித்துவ அடைபாள ஆணையம் -யுஐடிஏஐ (Unique Identification Authority of India UIDAI) 12 இலக்க ஆதார் அட்டையை வெளியிடுகிறது. இ-ஆதார் என்பது அடிப்படையில் உங்களது ஆதார் அட்டையின் மின்னணு வடிவம். மக்கள் தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை (demographic and biometric) சேகரித்து எளிய சரிபார்ப்புக்கு பிறகு இந்திய குடிமகன்களுக்கு யுஐடிஏஐ ஆல் இது வழங்கப்படுகிறது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை மக்கள் தொகை விவரங்கள். அதே போல் பத்து விரல் அடையாளங்கள், முக புகைபடம் (facial photograph) மற்றும் இரண்டு கண் கருவிழிப் படலம் (two iris scans) ஆகியவை பயோமெட்ரிக் தகவல்களாகும்.

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…

ஆதார் – குடியுரிமைக்கான ஆவணம் அல்ல : தெளிவுபடுத்தியது UIDAI

இ ஆதாரில் உள்ள சிறப்பம்சங்கள்

1.இ ஆதாரில் ஆதார் உடமையாளரின் பெயர், முகவரி, பாலினம், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

2. இ அதாரின் தனித்துவமான அம்சம் என்னவென்றால் இது கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.

3. புதிய இ ஆதாரின் வடிவமைப்பு டெக்ஸ்ட் (text) கள் மறுசீரமைப்பின் முலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

4. இ ஆதாரில் அந்த ஆதார் உருவாக்கப்பட்ட தேதி மற்றும் அந்த ஆதார் பதிவிறக்கம் செய்யப்பட்ட நாள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

5. இ ஆதாரில் ஆதார் உடமையாளரின் புகைப்படம் சற்று பெரிதாக இடம்பெற்றிருக்கும். பெரிய புகைப்படம் மூலமாக அந்த தனிநபரை சிறந்த முறையில் பார்க்க முடியும்.

6. புதிய இ ஆதாரில் Virtual ID (VID) என்பது ஆதார் எண்ணின் கீழே அச்சிடப்பட்டிருக்கும்.

ஆன்லைனில் ஆதார் அப்டேட் ரொம்ப ஈஸி – நீங்க செய்ய வேண்டியது இவ்ளோ தான்

7. இ ஆதாரில் Secure QR Code பயன்படுத்துவது தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட தகவல் இருக்கும்.

8. இ ஆதாரில் சின்னம் மற்றும் ஆதார் லோகோ இரண்டு பக்கங்களிலும் இருக்கும்.

9. இ ஆதார் அட்டை digitally signed by UIDAI.

10. சாதாரண ஆதார் அட்டையைப் போல இ ஆதார் அட்டையும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இ ஆதார் அட்டையை https://eaadhaar.uidai.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:E aadhaar card download aadhaar card online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X