ஆன்லைனில் ஆதார் அப்டேட் ரொம்ப ஈஸி – நீங்க செய்ய வேண்டியது இவ்ளோ தான்

ஆன்லைனில் முகவரியை மாற்ற வேண்டுமெனில்,  ஆதார் அட்டையுடன்  பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் வைத்திருக்க வேண்டும்

uidai aadhar update eaadhar.uidai.gov in
uidai aadhar update eaadhar.uidai.gov in

How to Update Aadhaar Online: ஆதார் அட்டை தொடர்பான மாற்றங்களை ஆன்லைனில் செய்வதற்கான  ஏற்பாட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு மீடியம் வாயிலாக உங்களுக்கு தேவையான அப்டேட்டுகளை செய்யலாம்.


ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்,

1. ஆணையத்தின் அதிகாரப்பூர்வ uidai.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும் .

2. ‘Update your address online’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் .

3. உங்கள் 12 இலக்க ஆதார் எண் (மற்றும்) கேப்ட்சா குறியீட்டை பதிவிட வேண்டும். பிறகு, நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு வருக்கு OTP- எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி

4. தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

5. உங்கள் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, நிலையைக் கண்காணிக்க ஒரு எண் உங்களுக்கு வழங்கப்படும். இந்த எண்ணை வைத்து “ஆன்லைன் முகவரி புதுப்பிப்பு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையென்ன” என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எனவே, ஆன்லைனில் முகவரியை மாற்ற வேண்டுமெனில்,  ஆதார் அட்டையுடன்  பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் வைத்திருக்க வேண்டும்.

ஆதார் அட்டை பதிவு மேம்பாடு மையத்தில் ஆதார் முகவரியை மாற்றுவது எப்படி?

உங்கள் விட்டுக்கு அருகில் உள்ள பதிவு / புதுப்பித்தல் மையத்தில் ஆதார் விவரங்களை திருத்தலாம்/புதுப்பிக்கலாம்.

ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு  சென்று அருகிலுள்ள ஆதார் அட்டை பதிவு மேம்பாடு மையத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவலின்படி , ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க 90 நாட்கள் ஆகலாம்.

மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை!

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Uidai aadhar update eaadhar uidai gov in

Next Story
ஒரு காலத்தில் ஆந்திராவை கலக்கிய யங் ஹீரோ! – இப்போது தமிழ் சீரியலில்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com