மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை!

முகவரியை மாற்றம் செய்ய 45 வகையான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்

By: February 15, 2020, 4:20:41 PM

Update email id with aadhaar : மின்னஞ்சல் முகவரியை ஆதாரில் சேர்ப்பதற்கு அல்லது அப்டேட் செய்வதற்கு எந்த வித ஆவணங்களும் தேவை இல்லை. எந்தவித ஆவணமும் இன்றி நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை ஆதார் அட்டையில் சேர்க்கவோ அல்லது அதை அப்டேட் செய்யவோ முடியும். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்வதற்கு நீங்கள் உங்கள் ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள ’ஆதார் சேவா கேந்திரா’ அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். இதை செய்வதற்கு நீங்கள் எந்தவித ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டாம். ஆதார் மையம் (Unique Identification Authority of India (UIDAI)) டிவிட்டர் வாயிலாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆதார் சேவை மையத்துக்கு சென்று உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை சேர்ப்பதற்கு அல்லது அதை அப்டேட் செய்வதற்கு கட்டணமாக நீங்கள் ரூபாய் 50 செலுத்த வேண்டும். நீங்கள் அப்டேட் செய்த மின்னஞ்சல் முகவரி மூலமாக இனி உங்களுக்கு ஆதார் தொடர்பான அனைத்து தகவல்கள் வரும். இது போல உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பாலினம், கைபேசி எண் ஆகியவற்றை திருத்தம் செய்வதற்கும் ரூபாய் 50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆதார் மையங்கள் மற்றும் ஆதார் சேவை மையங்களில் புதிய ஆதார் அட்டை பெறுவது மட்டுமல்லாமல், உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் பயோமெட்ரிக் தகவல்களையும் திருத்தம் செய்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை திருத்தம் செய்வதற்கான விதிகள்

பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் குறித்தான பட்டியலை ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பெயரை திருத்தம் செய்ய 32 வகையான ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அதே நேரம் முகவரியை மாற்றம் செய்ய 45 வகையான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் பிறந்த தேதியை மாற்ற 15 வகையான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் தற்போது ஆதார் இணையதளத்தில் ஆதார் தொடர்பான உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் ‘chatbot’ எனப்படும் உதவி சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் ஆதார் இணையதளத்தில் உள்ள ask aadhar chatbot என்பதை கிளிக் செய்து அதில் உங்களுடைய கேள்விகளை உள்ளீடு செய்து send’ஐ கிளிக் செய்தவுடன் மறுமுனையில் இருந்து உடனடியாக உங்கள் கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Update email id with aadhaar check the instructions here

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X