இன்று ஆதார் என்பது உங்கள் முகவரி அல்லது அடையாளத்துக்கான சான்று மட்டுமல்ல, அதை நீங்கள் வேறு பல நோக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு வங்கி கணக்கை ஆதார் எண் மூலமாக திறக்கலாம், ஆதார் எண்ணை வைத்து வருமான வரியை தாக்கல் செய்யலாம், அரசு வழங்கும் சமையல் எரிவாயு மானியம், ரேசன் மானியங்களை ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் மேலும் ஆதார் எண்ணை பயன்படுத்தி முதலீடுகளையும் செய்யலாம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எனவே அனைத்து இந்திய குடிமக்களும், குழந்தைகள் உட்பட ஆதார் எண் பெற்றுக் கொள்வது அவசியமானது. குழந்தைகளுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை எனினும் வாழக்கையில் சில தருணங்களில் அவர்களுக்கு ஆதார் எண் தேவை வரும். எனவே குழந்தைகளுக்கு நீங்கள் இப்போதே ஆதார் எண் பெற்றுக் கொண்டால் வருங்காலத்தில் அவர்களுக்கு எந்த சிக்கலும் வராது. எடுத்துக்காட்டாக உங்கள் குழந்தையை ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கும் போது குழந்தைக்கு ஆதார் எண் இருந்தால் அது எளிதாக முடியும். ஏனேன்றால் ஆதார் என்பது அனைத்து அரசுத்துறைகளாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அடையாளத்துக்கான ஆவணம் மேலும் அதை சரிப்பார்ப்பதும் எளிது.
சில பெற்றோர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து நேராக ஆதார் அட்டை எடுப்பதற்கான மையத்துக்கு விரைவதை காணமுடியும். அத்தகைய வசதியை ஆதார் அமைப்பு (Unique Identification Authority of India (UIDAI)) வழங்கினாலும், இந்த அளவுக்கு அவசரமாக ஆதார் எண் எடுக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தை சிறிது வளர்ந்த பிறகு ஆதார் எண் எடுத்துக்கொண்டால் போதுமானது.
குழந்தைகளுக்கு எவ்வாறு ஆதார் எண் எடுப்பது
உங்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்துக்கு உங்கள் குழந்தையை கூட்டிச் செல்லுங்கள்.
உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது அரசு மருத்துவமனை வெளியேற்ற (discharge slip) ரசீது தேவை.
உங்கள் குழந்தை பள்ளி செல்லும் பருவம் என்றால் குழந்தையின் பள்ளி அடையாள அட்டை, அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
பின்னர் உங்கள் குழந்தையின் புகைப்படம் எடுக்கப்படும். ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தை என்றால் அதன் பயோமெட்ரிக் அடையாளங்கள் எடுக்கப்பட மாட்டாது.
ஆதார் எண் தொடர்பான விவரங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் வரும்.
ஐந்து வயதுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு நீல நிறத்தில் உள்ள ’பால் ஆதார் அட்டை’ வழங்கப்படும்.
உங்கள் குழந்தைக்கான ஆதார் அட்டை உங்கள் வீட்டு முகவரிக்கு 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.
ஐந்து வயதுக்கு முன்பே குழ்ந்தைகளுக்கு ஆதார் அட்டை பெற்றுவிட்டால், குழந்தை ஐந்து வயது ஆன உடன் குழந்தையின் பயோமெட்ரிக் அடையாளங்கள் புதிதாக எடுக்கப்பட்டு ஆதார் அப்டேட் செய்ய வேண்டும்.
இதே போல் 15 வயது ஆன உடனும் குழந்தையின் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும்.