Advertisment

மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும், இ-ஷ்ரம் திட்டம் பற்றி தெரியுமா?

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறந்த ஓய்வூதியத் திட்டம்; முழுத் தகவல்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும், இ-ஷ்ரம் திட்டம் பற்றி தெரியுமா?

E shram pension scheme for unorganized workers details here: தங்கள் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொண்ட அமைப்புசாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா பற்றி அறிந்திருக்க வேண்டும். இந்த அரசாங்கத் திட்டத்தின் கீழ், அமைப்பு சாராத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.3000 உறுதி செய்யப்படுகிறது.

Advertisment

"பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டம் என்பது 60 வயதை எட்டியவுடன் மாதாந்திர குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ரூ.3000ஐ வழங்குவதற்கான தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். மேலும் விவரங்களுக்கு maandhan.in ஐப் பார்க்கவும், " என தொழிலாளர் நல இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து சமீபத்திய ட்வீட் கூறியது.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் யோஜனா என்றால் என்ன?

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்பது, 18 முதல் 40 வயது வரையிலான, மாத வருமானம் ரூ. 15000 அல்லது அதற்கும் குறைவாக உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்.

தகுதியானவர்கள் யார்?

18-40 வயதுக்குட்பட்ட எந்த ஒரு அமைப்புசாரா தொழிலாளியும், அதாவது வீட்டு வேலையாட்கள், தெருவோர வியாபாரிகள், தலை சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளை, செருப்பு தைப்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சலவை தொழிலாளிகள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், கிராமப்புற நிலமற்ற தொழிலாளர்கள், சொந்த வேலையை செய்யும் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள் போன்ற சாதாரண இயல்புடைய வேலை செய்யும் மற்றும் 15,000 ரூபாய்க்கு குறைவான மாத வருமானம் உள்ளவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியற்றவர்கள் யார்?

மேற்கண்ட வேலைகளை செய்யும், ஆனால் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகத் திட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புத் திட்டம் போன்ற எந்தவொரு சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழும் தொழிலாளர் காப்பீடு செய்தவர்கள் தகுதியற்றவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களும் இந்த திட்டத்தில் சேர முடியாது.

திட்டத்தின் நன்மைகள் என்ன?

எந்தவொரு அமைப்புசாரா தொழிலாளியும் இத்திட்டத்தில் சந்தா செலுத்தி, 60 வயது வரை வழக்கமான பங்களிப்பைச் செலுத்தியிருந்தால், அவருக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ. 3000 கிடைக்கும். மேலும் சந்தாதாரர் இறந்த பிறகு, அவரின் மனைவிக்கு மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும், இது ஓய்வூதியத்தில் 50 சதவீதமாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment