ரிஸ்க்கே இல்லாத முதலீடு... ரூ.5 லட்சம் வரை ரிட்டன்: போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீம் நோட் பண்ணுங்க!

"போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானம்” திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்து 5 ஆண்டுகள் வரை வருமானம் பெற முடியும். இந்தப் பதிவில் மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

"போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானம்” திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்து 5 ஆண்டுகள் வரை வருமானம் பெற முடியும். இந்தப் பதிவில் மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
2

ரூ.5 லட்சம் வரை ரிட்டன்: போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீம் நோட் பண்ணுங்க!

போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் செய்யும் முதலீட்டை வட்டியுடன் முதிர்வு காலத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் பல திட்டங்கள் இருந்தாலும், மாதா மாதம் வருமானம் தரும் திட்டம்தான் "போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம்". இந்தத் திட்டத்தில் மொத்தமாக ஒருமுறை முதலீடு செய்து அதன் பின் 5 ஆண்டுகள் வரை வருமானம் பெற முடியும். 

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம் (POMIS):

Advertisment

இந்த திட்டத்திற்கு தற்போது 7.4% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. POMIS திட்டம் என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும். POMIS திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1,000 முதல் டெபொசிட் செய்யலாம். மேலும் அதிகபட்ச வரம்பு ஒரு கணக்கிற்கு ரூ.9 லட்சமும் கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் உங்கள் விருப்பதைப் பொறுத்து முதலீடு செய்யலாம். நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு வட்டி வழங்கப்படும்.

எனவே, ஒருமுறை முதலீடு செய்த பிறகு எந்தவித முதலீடும் செய்ய வேண்டியிருக்காது. போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதாவது நீங்கள் முதலீடு செய்த நாளில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் கணக்கு துவங்கிய நாளிலிருந்து முதிர்வு காலம் வரை வட்டி வருமானம் உங்கள் கணக்கில் செலுத்தப்படும். 

POMIS திட்டத்தின் வரிச் சலுகைகள்: 

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டிற்கு ரூ.1.50 லட்சம் வரையிலான வரி சலுகை கிடைக்கும். மாதம் மாதம் முதலீடு செய்ய சிரமப்படுபவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். சில நேரங்களில் ஒத்திகை வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு மாற வேண்டிய சூழ்நிலை சிலருக்கு ஏற்படலாம். இதுபோன்ற நபர்கள் அந்த தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாடகைச் செலவை சமாளிக்க முடியும்.

Advertisment
Advertisements

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ.9,000 வருமானம் பெற என்ன செய்ய வேண்டும்?: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு தற்போது 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி இந்தத் திட்டத்தில் 15 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 வருமானமாகப் பெறலாம். அதாவது அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இந்த திட்டத்தின் வட்டியின் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். நமக்கு கிடைக்கக் கூடிய வட்டித் தொகை மட்டுமே 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 55 ஆயிரத்தை தொடும்.

post office scheme

முன்பே கூறியது போல் தனிநபராக இருந்தால் இந்த திட்டத்தில் ரூ.9 லட்சம் வரை மொத்தமாக முதலீடு செய்யலாம். அதுவே கூட்டு கணக்காக இருந்தால் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். உங்களுடைய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க உங்களுடைய மாத வருமானமும் அதிகரிக்கும். எனவே, ரூ.1000 முதல் ரூ.15 லட்சம் வரை எவ்வளவு தொகை உங்களால் முடியுமோ? அதை முதலீடு செய்யலாம். அதற்கு ஏற்றார் போல் மாத வருமானம் கிடைக்கும்.

Post Office Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: