சொந்தமாக ATM; மாதம் ரூ.60,000 வரை வருமானம்: SBI-யின் இந்த ஆஃபர் எப்படி இருக்கு?

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க எளிய வழி; எஸ்பிஐ வங்கியின் இந்த வாய்ப்பைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டுவதற்கான சிறந்த வழியை நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது. இந்த பிளேனில் மாதம் 60,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம். இது வருமானத்திற்கான சிறந்த வழியாக இருப்பது மட்டுமல்லாமல், உத்திரவாதமான வருமானத்தையும் தருகிறது. இத்தகைய சிறந்த வணிக யோசனையை பற்றி இச்செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

வங்கிகள் ஏடிஎம்களை சொந்தமாக நிறுவவில்லை. பெரும்பாலும், வெளிநிறுவனங்களின் கட்டுபாட்டில் தான் ஏடிஎம்கள் ஒப்பந்தம் அடிப்படையில் உள்ளன.

எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-கள், டாடா இண்டிகேஷ், முத்துட் ஏடிஎம், இந்தியா ஓன் ஏடிம் ஆகிய நிறுவனங்களின் கைவசம் உள்ளது. ஏடிஎம் ஆரம்பிப்பது தொடர்பாக, அந்நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் அப்ளை செய்யலாம்.

ஏடிஎம் நாம் நினைத்ததும் நிறுவ முடியாது, அதற்கேன சில நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

  • உங்களிடம் 50 முதல் 80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
  • மற்ற ஏடிஎம்களிலிருந்து அந்த இடத்தின் தூரம் 100 மீட்டராக இருக்க வேண்டும்.
  • இந்த இடம் தரை தளத்திலும் (ground floor) பார்வைக்கு நன்றாக தெரியக் (visibility) கூடிய இடத்திலும் இருக்க வேண்டும்.
  • 24 மணி நேர மின்சாரம் இருக்க வேண்டும். இது தவிர, 1 கிலோவாட் மின் இணைப்பும் கட்டாயமாகும்.
  • ஏடிஎம் நிறுவப்பட உள்ள இடத்தில் கான்கிரீட் கூரை இருக்க வேண்டும்
  • இந்த ஏடிஎம் ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனை திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
  • V-SAT ஐ நிறுவுவதற்கு சொசைடி அல்லது அங்கிருக்கும் அமைப்பிடமிருந்து No Objection Certificate சான்றிதழ் பெற வேண்டும்.

எப்படி சம்பாதிக்கிறோம்?

டாடா இண்டிகாஷ் மிகப்பெரிய பழமையான நிறுவனமாகும். இது 2 லட்சம் ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட்டில் ஏடிஎம் உரிமையை வழங்குகிறது. இந்த தொகை திரும்ப வழங்கப்படும். இது தவிர, நீங்கள் ரூ .3 லட்சத்தை செயல்பாட்டு மூலதனமாக டெபாசிட் செய்ய வேண்டும்.எனவே, நீங்கள் மொத்தம் ரூ .5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள்.

வருமானத்தைப் பார்க்கையில், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையிலும் ரூ .8 மற்றும் பணமில்லா பரிவர்த்தனையில் ரூ .2வும் கிடைக்கும். அதாவது, முதலீட்டின் மீதான வருவாய் ஆண்டு அடிப்படையில் 33-50 சதவீதம் வரை இருக்கும்.

உதாரணத்திற்கு, உங்கள் ஏடிஎம்மில் தினமும் 250 பரிவர்த்தனைகள் நடந்தால், அதில் 65 சதவிகிதம் பண பரிவர்த்தனை, 35 சதவிகிதம் பணமில்லா பரிவர்த்தனை என்றால், உங்கள் மாத வருமானம் 45 ஆயிரம் ரூபாய்க்கு ஆகும்.

அதே சமயம், தினமும் 500 பரிவர்த்தனைகள் நடந்தால், மாத வருமானம் சுமார் ரூ.88-90 ஆயிரமாக இருக்கும்.

எனவே, ஏடிஎம் நிறுவுதல் திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், மாதந்தோறும் மிகப்பெரிய லாபத்தைப் பார்க்கை வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Earn 60 thousand rupees per month via sbi atm franchise

Next Story
ரூ.100 வீதம் சேமிப்பு… ரூ.15 லட்சம் ரிட்டன்: இந்த தீபாவளியில் இப்படி பிளான் பண்ணுங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com