தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இந்த வங்கிகளில் FDக்கு அதிக வட்டி கிடைக்கும்!

High interest rates on FD: கொல்கத்தாவை சேர்ந்த யுகோ வங்கி(UCO Bank) FD கணக்கிற்கு அதிக வட்டி வழங்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

Fixed deposit, UCO bank

சில பொதுத்துறை வங்கிகள் தடுப்பூசி பற்றி மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன. கொரோனா தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காக பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கியுள்ளன. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. உங்கள் FDக்கு அதிக வட்டி பெற விரும்பினால், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் ஆவது செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

கொல்கத்தாவை சேர்ந்த யுகோ வங்கி(UCO Bank) FD கணக்கிற்கு அதிக வட்டி வழங்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட் தடுப்பூசியின் ஒரு டோசையாவது செலுத்திக்கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு 999 நாட்களுக்கான FDகளில் 30 அடிப்படை புள்ளிகள்(30 Basic Points) அல்லது 0.30% அதிக வட்டி விகிதத்தை வழங்குவதாக யுகோ வங்கி தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை ஊக்குவிப்பதற்காக யூகோ வங்கி UCOVAXI-999 என்ற சலுகையை வழங்குகிறது என வங்கி தெரிவித்துள்ளது. இந்த சலுகை செப்.30 வரை மட்டுமே கிடைக்கும்.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவும் Immune India Deposit Scheme என்ற திட்டத்தை அறிமுகப்படத்தியது. இதன் கீழ் தடுப்பூ செலுத்திக்கொள்பவர்களுக்கு 25அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25% அதிக வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 1111 நாட்களாகும். மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி பொருந்தும். இதுகுறித்த அறிவிப்பை அந்த வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் 23.59 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும். கொரோனா தடுப்பூசிகளுக்காக மாநிலங்கள் இனி செலவழிக்க தேவை இல்லை. வரும் ஜூன் மாதம் 21 -ம் தேதி புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளால் நேரடியாக வாங்கப்படும் 25 சதவீத தடுப்பூசிகளின் முறை தொடரும் என்று பிரதமர் கூறினார். தடுப்பூசிகளின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட தனியார் மருத்துவமனைகளால் 150 ரூபாய் சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதை மாநில அரசுகள் கண்காணிக்கும் என மோடி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Earn high interest rate on bank fixed deposit getting vaccinated

Next Story
வீட்டில் இருந்து வேலை பார்க்கின்றீர்களா? வருமான வரி தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?income tax raid, income tax raid at mc sambath relations places, வருமானவரித் துறை சோதனை, தமிழ்நாடு, எம்சி சம்பத் உறவினர் நிறுவனங்களில் வருமானவரி சோதனை, tamil nadu, tamil nadu assembly elections 2021, எம்சி சம்பத், ஐடி ரெய்டு, IT raid
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express