PPF Scheme : பொதுவாக முதலீட்டாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். அத்தகைய முதலீட்டாளர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் உங்களுக்காக சிறந்த முதலீட்டுத் திட்டமாக இது இருக்கலாம்.
நீங்கள் இதில் முதலீடு செய்து வழக்கமான வருமானத்தைப் பெறலாம். இந்த முதலீட்டுத் திட்டம் அஞ்சல் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் ஆகும். இதில் நீங்கள் ஆபத்து இல்லாமல் வருமானம் ஈட்டலாம்.
இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு 100 ரூபாய் செலுத்தி கூட கணக்கு தொடங்கலாம். 15 வருட முதிர்வு காலத்துடன் இந்தத் திட்டம் கிடைக்கும்.
மேலும், அஞ்சல் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி நீண்ட கால முதலீட்டிற்கு ஒரு நல்ல வழி ஆகும். இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு 7 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில், நீங்கள் ஒரு வருடத்தில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதாவது மாதம் ரூ.12,500 வரை முதலீடு செய்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியில் 40,68,209 ரூபாய் கிடைக்கும்.
அந்த வகையில், திட்டத்தில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாகவும், வட்டி ரூ.18,18,209 ஆகவும் இருக்கும்.
ஒரு நிதியாண்டில் இந்தத் திட்டத்தில் 500 முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 18 வயதுக்கு மேற்பட்ட எந்த இந்திய குடிமகனும் இந்த PPF கணக்கைத் திறக்கலாம். இந்த்த திட்டத்தில், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“