சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம். இந்த அருமையான வாய்ப்பை எஸ்பிஐ வங்கி உங்களுக்கு வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தபடியே மாதம் 60,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம். இது வருமானத்திற்கான சிறந்த வழியாக இருப்பது மட்டுமல்லாமல், உத்திரவாதமான வருமானத்தையும் தருகிறது. அப்படியான தொழில் வாய்ப்பு என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
ஏ.டி.எம் உரிமம்
எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.ஏம் –ஐ (SBI ATM Franchise) நிறுவுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். பெரும்பாலான வங்கிகள், அவர்களின் ஏடிஎம் மையங்களை அவர்கள் நிறுவவில்லை. ஏடிஎம் மையங்கள் நிறுவுவதை வெளி நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் விட்டுள்ளன. இது ஒப்பந்த அடிப்படையில் வங்கியால் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இப்போது நீங்கள் ஒரு ஏடிஎம்-ஐ வாடகைக்கு நிறுவினால் அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
நிபந்தனைகள்
ஒரு ஏடிஎம் மையத்தை நிறுவ என்னென்ன நிபந்தனைகள் உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.
1. எஸ்பிஐ ஏடிஎம் உரிமையை பெற, நீங்கள் 50 முதல் 80 சதுர அடி இடத்தை வைத்திருக்க வேண்டும்.
2. மற்ற ஏடிஎம்களிலிருந்து உங்கள் இடத்தின் தூரம் குறைந்தது 100 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.
3. இந்த இடம் தரை தளத்திலும் (ground floor) பார்வைக்கு நன்றாக தெரியக் (visibility) கூடிய இடத்திலும் இருக்க வேண்டும்.
4. நீங்கள் தேர்வு செய்யும் இடத்தில் 24 மணி நேர மின்சாரம் இருக்க வேண்டும். இது தவிர, 1 கிலோவாட் மின் இணைப்பும் கட்டாயமாகும்.
5. இந்த ஏடிஎம் ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனை திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
6. ஏடிஎம் நிறுவப்பட உள்ள இடத்தில் கான்கிரீட் கூரை இருக்க வேண்டும்.
7. V-SAT ஐ நிறுவுவதற்கு உள்ளூர் அமைப்பிடமிருந்து ஆட்சேபனை ஏதும் இல்லை (No Objection Certificate) என்ற சான்றிதழ் பெற வேண்டும்.
வருமானம் எப்படி?
உங்களால் நிறுவப்பட்ட ஏடிஎம்மில் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ.60,000 க்கு மேல் வருமானம் ஈட்டலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil