பட்ஜெட் எதிரொலி : இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சி

பல மாதங்களாக, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்த இந்திய பங்குசந்தை, விரைவில் வீழ்ச்சி காணும் என்பது பல நிபுணர்களின் கருத்து.

இந்திய பங்குசந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 840 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு, 35 ஆயிரத்து 66லும், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிப்டி, 256 புள்ளிகள் சரிந்து, 10 ஆயிரத்து 760 என்ற அளவிலும் வணிகத்தை முடித்தன. இதனால், இன்று சுமார் பல லட்சம் கோடி ரூபாய் வரை பங்கு மதிப்பு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சந்தை கண்ட 5வது மிகப் பெரிய வீழ்ச்சி இது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

பல மாதங்களாக, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்த இந்திய பங்குசந்தை, விரைவில் வீழ்ச்சி காணும் என்பது பல நிபுணர்களின் கருத்து. இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளால், ஏற்பட்டுள்ள ஏமாற்றம் இந்த சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. நீண்டகால முதலீடு மீதான லாபத்தில், 1 லட்ச ரூபாய்க்கும் அதிக லாபம் பெற்றால், அதில் 10 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும் என்ற செய்தி இந்திய முதலீட்டாளர்களை பாதித்துள்ளது. இதுவே சந்தை சரிவுக்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ், தனது வட்டி விகிதம் குறித்து வெளியிட உள்ள அறிவிப்பும் சந்தையில் அச்சத்தை அதிகரித்துள்ளது. சந்தை மீள உதவவில்லை என சொல்லப்படுகிறது.

×Close
×Close