/indian-express-tamil/media/media_files/2025/04/26/wWiQIygpnfHwVb5vLLL4.jpg)
எல் & டி ஃபைனான்ஸ், பிரைமால் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஸ் ஃபின்செர்வ் போன்ற நிறுவனங்கள் சார்பில் தங்க நகை கடன் வழங்கப்படுகிறது. தங்க நகைகளுக்கு கடன் வழங்குவதன் மூலம் அதிக லாபம் பார்க்கலாம் என்ற காரணத்தால் இவ்வளவு நிறுவனங்கள் களத்தில் இறங்கி இருப்பதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.
தங்கத்தின் மதிப்பு எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்களிடமும் பணப்புழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். இதனை கருத்திற்கொண்டு ஏராளமான நிறுவனங்கள் இந்த தொழிலில் இறங்கி இருக்கின்றன.
இது போன்ற நிறைய நிறுவனங்கள் தங்க நகைகளுக்கு கடன் வழங்குவதால் பொதுமக்களுக்கு வட்டி குறைவாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார். ஆனால், பெரும்பாலான மக்கள் வட்டியை பார்ப்பதை விட, எந்த அளவிற்கு அதிகமாக கடன் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இத்தனை நிறுவனங்கள் தங்க நகைக் கடன் வழங்குவதால், பொருளாதார நிலை மோசமடைவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார். குறிப்பாக, இவை அடகு கடை போன்று செயல்படுவதால் குறைந்த வட்டி மற்றும் அதிக கடன் வழங்கும் நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில், புதிதாக களமிறங்கி இருக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சவால் இருக்கிறது. ஏனெனில், வழக்கமாக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் வாடிக்கையாளர்களை, அவர்களது பழைய நிறுவனங்களிடமிருந்து இந்தப் புதிய நிறுவனங்கள் நோக்கி நகர்த்துவது சவாலாக இருக்கும் என்று ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.
நன்றி - Money Pechu Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.