/indian-express-tamil/media/media_files/2025/04/26/wWiQIygpnfHwVb5vLLL4.jpg)
இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக பங்குச்சந்தைகள் மற்றும் தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கும் என்று சந்தேகம் பலருக்கு இருக்கும். அதற்கான விடையை தனது யூடியூப் சேனலில் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
சந்தை நிலவரம் 90 முதல் 100 புள்ளிகள் சரிவில் இருக்கிறது. இது தவிர பேங்க் நிஃப்டி 200 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலவரம் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மருந்துகள் தொடர்பான நிறுவனங்களும் பங்குச்சந்தையை பொறுத்தவரை இறக்கத்தை கண்டுள்ளன. தங்கம் விலையை பொறுத்தவரை சிறிய அளவில் விலை குறைந்திருக்கிறது. ஆனால், இதனை அதிகளவிலான வீழ்ச்சி என்று நாம் கருத முடியாது என்று ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.
தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் பெரிய அளவில் உயரவில்லை. செண்ட்ரல் வங்கிகளின் தலையீடு இல்லாததால், தங்கம் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே உள்ளது.
ஆனால், நீண்ட கால அடிப்படையில் 24 காரட் தங்கம் உயர வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், அமெரிக்காவில் வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இத தவிர போர் நடக்கும்பட்சத்தில் அரசியல் காரணங்களின் அடிப்படையில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, பணவீக்கம் அதிகரித்தாலும், வட்டி விகிதங்களை உயர்த்தப் போவதில்லை என்று ஜப்பான் அறிவித்துள்ளது. ஏனெனில் அரசாங்கம் அதிக கடன் வாங்கி உள்ளது. பணப்புழக்கத்தை மேம்படுத்த பத்திர விற்பனையைக் குறைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.