சத்தமே இல்லாமல் ஷாப்பிங் செய்த ரத்தன்... 'டாடா' சாம்ராஜ்ஜியம் கோலோச்ச இதுதான் காரணம்: ஆனந்த் சீனிவாசன்
ரத்தன் டாட்டாவின் எளிமை மற்றும் ஒரு பிரம்மாண்ட சாம்ராஜ்ஜியத்தை எவ்வாறு அவர் உருவாக்கினார் என்பதற்கான விளக்கத்தை சில சம்பவங்கள் மூலம் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாட்டாவின் எளிமை மற்றும் ஒரு பிரம்மாண்ட சாம்ராஜ்ஜியத்தை எவ்வாறு அவர் உருவாக்கினார் என்பதற்கான விளக்கத்தை சில சம்பவங்கள் மூலம் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
"பணம் சிலரது கைகளில் மட்டுமே தங்கும், மற்றவர்களிடம் தங்காது" என்ற பொதுவான கூற்றை நமது வாழ்நாளில் நாம் அடிக்கடி கேட்டிருப்போம். மேலும், செல்வம் யாரிடம் நிலைத்திருக்கும், அந்த குணாதிசயங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்வது எப்படி என்றும் நம் எல்லோரிடத்திலும் கேள்வி எழும்.
Advertisment
பரம்பரை பணக்கார குடும்பங்கள் எவ்வாறு தலைமுறைகள் தாண்டி செல்வத்தை பராமரிக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் நிறைய பேருக்கு இருக்கும். இவை அனைத்திற்குமான விளக்கத்தை மறைந்த முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாட்டா, தனது வாழ்நாளில் கடைபிடித்த குணங்கள் மூலமாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதற்காக இரண்டு சம்பவங்களை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் இருக்கும் ஒரு ஃபேப் இந்தியா ஷோரூமுக்கு வந்து ஷாப்பிங் செய்வதை ரத்தன் டாட்டா வாடிக்கையாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அங்கு ரத்தன் டாட்டா ஷாப்பிங் செய்வதை ஒரு பிரபல பத்திரிகையாளரும், அவரது தாயாரும் நேரில் பார்த்துள்ளனர். அங்கு இருப்பவர்கள் தங்கள் பணிகளை முடிக்கும் வரை நிதானமாக காத்திருக்கும் தன்மை ரத்தன் டாட்டாவிடம் இருந்ததாக ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.
இது தவிர ஆனந்த் சீனிவாசன் அலுவலகத்தின் மேல்தளத்தில் இருக்கும் டாட்டா டெக்னாலஜிஸ் அலுவலகத்திற்கும் ரத்தன் டாட்டா வருகை தருவதாக அவர் கூறுகிறார். குறிப்பாக, அங்கு இருக்கும் விற்பனையாளர்களிடம் சுமார் 30 நிமிடங்கள் வரை சாதாரணமாக பேசும் தன்மையை ரத்தன் டாட்டா கடைபிடித்தார் என்றும் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இது போன்ற எளிமையான மற்றும் நிதானமான குணாதிசயங்களை கடைபிடித்ததால் தான் அவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் ஆற்றல் ரத்தன் டாட்டாவிடம் இருந்ததை நாம் உணர முடிகிறது. மேலும், இதுவே பரம்பரை பணக்காரர்களின் தன்மை என்றும் ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.