இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் படிக்கும் தங்கள் கனவைத் தொடர நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் சர்வதேச வாழ்க்கைக்காக அவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்கிறார்கள்.
ஃபேஷன், வணிக மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் மேலாண்மை மற்றும் பல போன்ற சிறப்புப் படிப்புகளுக்கு என்று பிரத்யேகமாக சில நாடுகள் அறியப்படுகின்றன.
இதற்கிடையில், பெரும்பாலான மாணவர்கள் வெளிநாட்டில் தங்கள் கல்விக்கு நிதி கிடைப்பதை பெரும்பாலும் சவாலாகக் காண்கிறார்கள்.
இவர்களுக்கு மேலும் ஒரு கேள்வியும் எழுகிறது. அது வெளிநாட்டில் கல்வியை தொடர கல்விக் கடன் பெறலாமா? அல்லது தனிநபர் கடன் சிறந்ததா என்பதே ஆகும்.
பொதுவாக, தங்குமிடம், கல்விக் கட்டணம் மற்றும் பிற அன்றாடச் செலவுகள் போன்ற உங்கள் கல்வி தொடர்பான செலவுகளை திறம்பட நிர்வகிப்பதற்கு சரியான நிதி ஆதாரத்திற்கு விண்ணப்பிப்பது அவசியம்.
தனிநபர் கடன்
தனிநபர் கடன் பெற்ற நிதியானது கல்வி, கல்விக் கட்டணம், திருமணம், வீடு புதுப்பித்தல், விடுமுறைகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.
கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கடன் வாங்கிய தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். தனிநபர் கடனை குறைந்தபட்ச ஆவணங்களுடன் விரைவாக பெற முடியும்.
கல்விக் கடன்
கல்விக் கடன் என்பது மாணவர்கள் தங்கள் கல்வி தொடர்பான செலவினங்களைச் செலுத்த விண்ணப்பிக்கும் ஒரு வகை கடனாகும். பல வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ கல்வியைப் பெற விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கு கல்விக் கடன்களை வழங்குகின்றன.
இரு வகையான கல்விக் கடன்கள்
உள்நாட்டுக் கல்விக் கடன்: இந்தியாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு இது ஏற்றது. கடன் வாங்கியவர் இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்ந்து மற்ற தகுதிகளை பூர்த்தி செய்தால் மட்டுமே வங்கி கடனை அங்கீகரிக்கிறது.
வெளிநாட்டுக் கல்விக் கடன்: இந்தியாவிற்கு வெளியே படிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு இது ஏற்றது. ஒரு மாணவர் வெளிநாட்டு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே இந்தக் கடனுக்குத் தகுதியுடையவர். கல்விக் கட்டணம், தங்குமிடம், விமானக் கட்டணம் போன்றவற்றை இந்தக் கடன் உள்ளடக்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/