Advertisment

கல்வி முதல் பயணம் வரை; ஆகஸ்டில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புதல் அதிகரிப்பு

Education to travel, outward remittance in August all-time high: கல்வி, பயணம் உள்ளிட்ட நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கான பணப்பரிமாற்றம் எப்போதையும் விட அதிகரிப்பு; ஆகஸ்ட் மாதத்தில் 1.96 பில்லியனை எட்டி சாதனை

author-image
WebDesk
New Update
சென்னை விமான நிலைய புதிய முனையம்; பயணிகளுக்கான வசதிகள் என்னென்ன?

ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான சேர்க்கை சாதகமான சூழ்நிலையை அடைந்துள்ளது. வெளிநாட்டுப் பயணத்தில் நிலையான இயல்பாக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் உயர்வு ஆகியவற்றுடன், தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் மாதாந்திர வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஆகஸ்ட் மாதத்தில் $ 1.96 பில்லியனை எட்டியது.

Advertisment

முந்தைய அதிகபட்ச பரிமாற்றமானது, ஆகஸ்ட் 2019 இல் $ 1.87 பில்லியனாக இருந்தது. இந்த ஆகஸ்ட் மாதத்தில், "வெளிநாட்டில் படிப்புக்காக" என்ற கணக்கில் பணம் அனுப்புவது மட்டும் 780 மில்லியன் டாலர் என்ற மாதாந்திர உயர்வாக இருந்தது.

பயணத்திற்கான பணம், கடந்த 18 மாதங்களில் ஆகஸ்டில் அதிகபட்சமாக 574 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது கொரோனா காரணமாக பல நாடுகள் விமானம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிய பிப்ரவரி 2020 க்குப் பிறகு மிக உயர்ந்தது. ஆகஸ்ட் 2021 இல் நெருங்கிய உறவினர்களின் "பராமரிப்பு" நோக்கத்திற்காக 284.8 மில்லியன் டாலர் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் செப்டம்பரில் தங்கள் புதிய வகுப்புகளைத் தொடங்குவதால், பாரம்பரியமாக ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்கள் கட்டணம், தங்குமிடம், டிக்கெட் மற்றும் பிற அமைவு செலவுகளுக்காக, வெளிநாட்டிற்கு அதிக பணம் அனுப்பப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எச்டிஎப்சி கிரெடிலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ அரிஜித் சன்யால் கூறுகையில், இந்த மாதத்தில் தங்களது நிறுவனம் அதிக அளவில் பணம் செலுத்தியுள்ளது என்றார். மேலும், கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கால் இதற்கான தேவை குறைந்தது. ஆனால் இந்த ஆண்டு தேவை அதிகரித்துள்ளது, இது உயர்வுக்கு வழிவகுத்தது. மேலும், மாணவர்கள் நிறைய புதிய நாடுகளுக்கு செல்கின்றனர். இது அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வழிவகுத்தது,” என்றும் சன்யால் கூறினார்.

சன்யாலின் கூற்றுப்படி, அமெரிக்கா தொடர்ந்து இந்திய மாணவர்களின் பெரும் பங்கைப் பெறுகிறது, கனடாவும் இங்கிலாந்தும் பெரிய சந்தைகளாக மாறிவிட்டன, மேலும் "மேலும் பல புதிய இடங்களுக்கும் மாணவர்கள் கல்விக்காகச் செல்கின்றனர்".

publive-image

இரண்டு காரணிகளால் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் சேர்க்கை பெற முடிந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்: பல பல்கலைக்கழகங்கள் கலப்பின கல்வி முறையின் பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து, சேர்க்கையை அதிகரித்துள்ளன மற்றும் இந்திய மாணவர்கள் தங்கள் போட்டித்தன்மையின் காரணமாக தங்கள் பங்கை அதிகரித்துள்ளனர்.

கடந்த மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், தடுப்பூசிகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கொரோனா எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை இருந்ததாக கல்வி ஆலோசனை வணிக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதன் விளைவாக, பல மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறவில்லை. இந்த ஆண்டு, தடுப்பூசிகள் மற்றும் அது அளிக்கும் பாதுகாப்பு குறித்து அதிக தெளிவு உள்ளதால், சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக வளர்ந்துள்ளது ”என்று ஹைதராபாத்தில் உள்ள முன்னணி வெளிநாட்டு கல்வி ஆலோசகருடன் ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

"வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது மற்றும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஒரு சிறு சறுக்கலைத் தவிர இந்த போக்கு மாறாமல் உள்ளது" என்று அந்த அதிகாரி கூறினார்.

ஆகஸ்ட் மாதத்தில் பதிவான வெளிநாட்டு பணப்பரிமாற்றத்துடன், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் பதிவான பரிமாற்றம் மொத்தம் $ 6.94 பில்லியனை எட்டியுள்ளது. ஒப்பிடுகையில், கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்த கடந்த நிதியாண்டின் இதே ஐந்து மாத காலப்பகுதியில் அனுப்பப்பட்ட பணம் $ 4.05 பில்லியனாக இருந்தது. இது FY'21 ல் முழு வருடத்திற்கு, $ 12.68 பில்லியன் ஆகும்.

2004 இல் எல்ஆர்எஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எந்த நிதியாண்டை காட்டிலும் 2019-20 ஆண்டில் அதிகபட்சமாக $ 18.76 பில்லியன் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டது.

கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் கூர்மையான ஏற்றத்தைக் கண்டுள்ளது. 2014-15 நிதியாண்டில் எல்ஆர்எஸ் கீழ் வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவது $ 1.325 பில்லியனாக இருந்தது, அது 2015-16 இல் 4.6 பில்லியனாக உயர்ந்தது, அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்து, 2019-20 இல் $ 18.76 பில்லியனாக உயர்ந்தது.

ஏப்ரல் 2014 முதல் எல்ஆர்எஸ் கீழ் மொத்தமாக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட பணம் 77.6 பில்லியன் டாலராக உள்ளது. "வெளிநாட்டில் படிப்பதற்காக" கிட்டத்தட்ட $ 20 பில்லியன் பணம் அனுப்பப்பட்டாலும், பயண நோக்கத்திற்காக $ 24 பில்லியனுக்கும் அதிகமான தொகை அனுப்பப்பட்டுள்ளது.

எல்ஆர்எஸ் -ன் கீழ், குடியுரிமை பெற்ற தனிநபர்கள் ஒரு நிதியாண்டில் 250,000 டாலர் வரை பல்வேறு தலைப்புகளின் கீழ் பணம் செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர், இதில் வேலைவாய்ப்பு, படிப்பு, பயணம், குடியேற்றம், நெருங்கிய உறவினர்களை பராமரித்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்றவற்றிற்காக வெளிநாடுகளுக்கு செல்வது உள்ளிட்ட நடப்பு கணக்கு பரிவர்த்தனைகள் அடங்கும்.

வெளிநாடுகளில் வெளிநாட்டு நாணய வங்கி கணக்குகளைத் திறத்தல், சொத்து வாங்குவது மற்றும் பரஸ்பர நிதிகளின் அலகுகளில் முதலீடு செய்வது மற்றும் துணிகர மூலதன நிதிகள் உட்பட எல்ஆர்எஸ் -ன் கீழ் மூலதன கணக்கு பரிவர்த்தனைகளுக்காக குடியிருப்பாளர்கள் பணத்தை மாற்றலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Business Foreign Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment