namakkal | தமிழ்நாட்டின் நாமக்கல் மண்டலத்தில் சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது, கிட்டத்தட்ட சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த முட்டைகளில் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இதுபோக, வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி நடக்கிறது.
மீதமுள்ள முட்டைகள் அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனை முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் வரலாற்று உச்சமாக, நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத விலை உயர்வை எட்டியுள்ளது. முட்டை கொள்முதல் விலை தற்போது 5 ரூபாய் 75 காசுகளாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“