/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-25T145254.807.jpg)
egg rate today chennai
egg rate in CHENNAI Tamil News: தமிழகத்தில் முட்டை விலை கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கலில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முட்டை விலை 15 காசுகள் உயா்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ.5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத உச்சபட்ச விலை உயர்வாகும். முன்னதாக, நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.5.25 ஆக இருந்தது. இந்த நிலையில், முட்டை விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-25T145241.342.jpg)
முட்டையின் இந்த திடீர் விலை உயர்வு குறித்து பேசியுள்ள பண்ணையாளர்கள், "தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடைக்கால துவக்கத்திலேயே அதிகளவு வெப்பத்தினால் வயதான கோழிகள் இறந்துவிடும் என்பதால் அவற்றை பண்ணையாளர்கள் விற்பனை செய்துவிட்டனர். மேலும் பண்ணைகளில் புதிதாக கோழிகளை விடாமல் இருந்து வந்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-25T145301.764.jpg)
இதனால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி கணிசமாக குறைந்தது. மேலும், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சத்துணவு திட்டத்திற்கு தினசரி நாமக்கல் மண்டலத்தில் இருந்து சராசரியாக 40 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், விற்பனைக்கு முட்டைகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.