scorecardresearch

பெட்ரோல், டீசலா? எலெக்ட்ரிக் கார்களா? எது பட்ஜெட்டுக்கு உகந்தது?

பல கடன் வழங்குநர்கள் மின்சாரம் அல்லாத வாகனங்களை விட மின்சார வாகனங்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகிறார்கள்.

Electric Vs Non-Electric Vehicle Here is how to choose a budget-friendly vehicle
வாகனத்தில் சிறப்புகளை அறிந்து நுகர்வோர் தேர்வு செய்து வாங்குவது நல்லது.

சொகுசு கார்கள் வரும் ஆண்டு விலை உயருகின்றன. ஆகையால் இந்தாண்டு புதிய கார்கள் வாங்குவதற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது. மறுபுறம் தள்ளுபடி, சலுகை என பழைய இருப்பு இருக்கும் கார்களை தலையில் கட்டிவிடக் கூடாது என்ற அச்சமும் உள்ளது.

இதனால் வாகனத்தில் சிறப்புகளை அறிந்து நுகர்வோர் தேர்வு செய்து வாங்குவது நல்லது. அந்த வகையில், எலெக்ட்ரிக் வாகனம் வாங்குவதா அல்லது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனம் வாங்குவதா என்பது குறித்து உங்களுக்கு தெளிவு தேவைப்பட்டால், நீங்கள் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று பட்ஜெட் மற்றும் வாகனக் கடன் வாங்கும்போது நீங்கள் செலுத்தும் வட்டி. இது ஒரு கார் அல்லது மோட்டார் பைக்காக இருக்கலாம், ஆனால் உங்கள் முடிவுகளுக்கு பின்னர் வருத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் புத்திசாலித்தனமாக உங்கள் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு விலை அதிகம். இருப்பினும், குறைந்த பராமரிப்புச் செலவுகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் காரணமாக நீண்ட காலத்திற்கு நீங்கள் நிறைய பணத்தைச் சேமிக்க முடியும்.
இந்த நாட்களில் பல மாநிலங்களின் அரசாங்கம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனத்திற்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனம் வாங்கி வரிச்சலுகை பெறலாம்.

மேலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் எளிதான பிளக் மற்றும் பிளே அம்சங்களுடன் வருகின்றன. எனவே, அடிப்படை ஓட்டுநர் திறன் கொண்ட அனைவரும் இந்த வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

வசதி மற்றும் அம்சங்களைத் தவிர, மின்சார வாகனத்தை வாங்கும் போது நீங்கள் அனுபவிக்கக்கூடிய மற்ற நன்மைகள் மலிவான கடன் விருப்பங்களாகும்.

பல கடன் வழங்குநர்கள் மின்சாரம் அல்லாத வாகனங்களை விட மின்சார வாகனங்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகிறார்கள்.
அந்த வகையில், கீழே உள்ள அட்டவணை, மின்சார மற்றும் மின்சாரம் அல்லாத வாகனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட உதவுகிறது. உங்கள் தகுதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்யலாம்.

அனைத்து பட்டியலிடப்பட்ட (பிஎஸ்இ) பொது மற்றும் பிரைவேட் வங்கிகளுக்கான கார் கடனுக்கான வட்டி விகிதங்கள் தரவுத் தொகுப்பிற்காகக் கருதப்படுகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Electric vs non electric vehicle here is how to choose a budget friendly vehicle

Best of Express