ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ் ஈஎம்ஐ அவகாசம் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ICICI Bank vs HDFC Bank vs Axis Bank : மார்ச் 1, 2020 க்கு முன்னர் overdues இருந்தாலும் கடன் தவனை ஒத்திப்போடுவதை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். அவர்களது கோரிக்கை தகுதிகளின் அடிப்படையில் வங்கியால் கருத்தில் கொள்ளப்படும்
EMI moratorium: ICICI Bank vs HDFC Bank vs Axis Bank
EMI moratorium: மார்ச் 27 ஆம் தேதி பாரத ரிசர்வ் வங்கி அனைத்து முன்னனி வங்கிகளிடமும் கடன்களுக்கான தவனை தொகை ஈஎம்ஐ வசூலிப்பதை மூன்று மாதங்களுக்கு ஒத்திப்போட கேட்டுக்கொண்டது. வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன், டெபிட் அட்டைகள் மற்றும் கடன் அட்டைகளுக்கான ஈஎம்ஐ தொகையை செலுத்துவது உட்பட அனைத்துவிதமான கடன் வாங்கியவர்கள் கடன் தவனையை செலுத்த மூன்று மாத கால அவகாசம் கொடுக்கும்படி வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களை கேட்டுக்கொண்டது.
நீங்கள் வாங்கிய கடனுக்கு மாத தவனை செலுத்தி வருகிறீர்கள் என்றால் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான கடன் தவனை தொகையை ஈஎம்ஐ செலுத்த வேண்டியதில்லை. மூன்று மாத கால அவகாசத்துக்கு பிறகு கடன் தவனையை செலுத்த வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி
வாடிக்கையாளர்கள் மீது கோவிட்-19 தாக்கத்தை பொறுத்து ஐசிஐசிஐ வங்கி அனைத்து கடன்கள் மற்றும் கடன் வசதிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளது.
பிரிவு A : இந்த பிரிவில் உள்ள கடன்களுக்கான தவனை செலுத்துவதிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தானாகவே நிவாரணம் கிடைக்கும். நீங்கள் தொடர்ந்து தவனை செலுத்த விரும்பினால், www.icicibank.com என்ற இணைய முகவரியில் loan / credit facility என்பதிலிருந்து ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த பிரிவில் உள்ள கடன்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பிரிவு B: இந்த பிரிவு கடன்களில், தவனை அவகாசத்தை பெற வாடிக்கையாளார்கள் www.icicibank.com என்ற இணைப்பில் சம்பந்தப்பட்ட loan / credit facility என்பதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தேர்வு செய்ய வேண்டும். இந்த இணைப்பிற்கு பதிலளிக்க வில்லை என்றால் நீங்கள் தொடர்ந்து தவனை தொகையை செலுத்த விரும்புகிறீர்கள் என்று கருதப்படும். இந்த பிரிவில் உள்ல கடன்களின் பட்டியல்
சில்லறை தவனை கடன் அல்லது சில்லறை கடன் வசதிகளை மார்ச் 1, 2020 க்கு முன்னர் பெற்றிருந்தால் அவர்கள் தகுதியுடையவர்கள் என வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மார்ச் 1, 2020 க்கு முன்னர் overdues இருந்தாலும் கடன் தவனை ஒத்திப்போடுவதை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். அவர்களது கோரிக்கை தகுதிகளின் அடிப்படையில் வங்கியால் கருத்தில் கொள்ளப்படும்.
வாடிக்கையாளர் 3 மாத கடன் ஒத்திப்போடுவதை தேர்ந்தெடுத்தால் அவர்களிடன் மே 31, 2020 வரை வங்கி ஈஎம்ஐ தவனை செலுத்த அவர்களிடம் கேட்காது.
ஆக்ஸிஸ் வங்கி
இது வெறும் கடன் தவனை ஒத்திப்போடுவது மட்டும்தான், கடன் தவனை தள்ளுபடியோ அல்லது சலுகையோ இல்லை வட்டி இந்த காலத்துக்கும் சேர்த்து கணக்கிடப்படும். கடன் தவனையை ஒத்திப்போடும் காலம் முடிந்தபிறகு, திரும்ப செலுத்துதல் ஜூன் 2020 முதல் மறுபடியும் துவங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”