ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முஞ்சால் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் இன்று திடீரென ஆட்டம் கண்டன. மளமளவென சரிய ஆரம்பித்தன. Hero MotoCorp ஆனது 2001 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளராக மாறியது.
விற்பனையின் அடிப்படையில், கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது. மேலும், நிறுவனம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் 40 நாடுகளில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று தேசிய பங்குச் சந்தையில் ஒரு பங்கு கிட்டத்தட்ட 3.24 சதவீதம் (ரூ.103.65) வரை சரிந்து ரூ.3,100.05 ஆக விற்பனையாகிவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“