Advertisment

EPFO News: இதை தெரிஞ்சுக்கோங்க... குழந்தைகள் மேல்படிப்புக்கு முன்பணம் பெறுவது எப்படி?

EPF allows withdrawal for education full details: குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பணம் வேண்டுமா? வருங்கால வைப்பு நிதியின் இந்த சலுகைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

author-image
WebDesk
New Update
EPFO News: இதை தெரிஞ்சுக்கோங்க... குழந்தைகள் மேல்படிப்புக்கு முன்பணம் பெறுவது எப்படி?

தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்கவே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது படிப்பு. குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கினால் தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். நல்ல கல்விக்காக எவ்வளவு செலவு செய்யவும் எந்த பெற்றோரும் தயங்குவதில்லை. இந்த நிலையில் போதுமான சேமிப்போ அல்லது பிற வாய்ப்புகளோ இல்லாத பெற்றோர்கள் கல்விக் கடன் பற்றி சிந்திக்கலாம்.

Advertisment

கல்வி நோக்கத்திற்காக வெவ்வேறு கடன் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் உங்கள் பெயரில் தனிநபர் கடன் பெறலாம் அல்லது உங்கள் குழந்தைகள் பெயரில் கல்விக் கடன் பெறலாம். ஒரு தனிநபர் கடன் என்பது தொந்தரவு இல்லாத கடன் ஆகும், பிணையம் தேவையில்லை. இதனை உங்கள் வருமானம் மூலம் EMI களாக செலுத்தும் வாய்ப்பு உண்டு. இதற்கு உங்கள் கடன் மதிப்பெண் குறைந்தது 700-750 இருக்க வேண்டும். அதேசமயம், கல்விக் கடனைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கல்விக் கடனுக்கு பிணையம் தேவைப்படுகிறது, மேலும் வங்கிகள் முழுத் தொகையையும் நிதியளிக்க முடியாது, குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் கடன் தொகைகளில் 5% -10% வரை குறைவாகவே கிடைக்கும். இந்த இரண்டு கடன்களும் தவணை முறையில் செலுத்தப்பட வேண்டும், தவணைகளில் அசல் மற்றும் வட்டி இரண்டும் அடங்கும்.

இதைத் தவிர உங்களுக்கான சிறந்த வாய்ப்பு, குழந்தைகளின் கல்விக்காக உங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) எதிராக கடன் வாங்கலாம். நீங்கள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்பதால் இது ஒரு தனித்துவமான கடன். இது மாதத்திற்கு மாதம் மற்றும் ஆண்டுக்கு ஆண்டு திரட்டப்படும் மொத்த தொகையிலிருந்து திரும்பப் பெறுவது போல் கருதப்படுகிறது. எனவே, நீங்கள் கையில் பெறும் சம்பளம் பிஎஃப் கழித்த பிறகு வருகிறது. இந்த பிடித்தம் அனைத்தும் காலப்போக்கில் ஒரு பெரிய தொகையாக மாறும்.

பிடித்தம் எப்படி நடக்கிறது?

நிறுவனத்தால் உங்கள் அடிப்படை சம்பளத்தில் பிடிக்கப்பட்ட 12% தொகையை மற்றும் அகவிலைப்படி ஆகியவை உங்கள் வருங்கால வைப்பு நிதியில் வைப்புத்தொகையாக வைக்கப்படும். இதில் நிறுவனமும் தங்கள் பங்கை வழங்கும்.

கல்விக்காக நீங்கள் இபிஎஃப் -லிருந்து எவ்வளவு திரும்பப் பெற முடியும்?

உங்கள் ஈபிஎஃப் பங்களிப்பு மற்றும் திரட்டப்பட்ட வட்டியின் மொத்தத்தில் 50% வரை திரும்பப் பெறலாம். உங்கள் மகன், மகள், உடன்பிறப்புகள் மற்றும் உங்களுடைய கல்விக்காகவும் பணத்தை திரும்பப் பெறலாம். உயர்கல்வி படிப்புகளுக்காக இதைப் பெறலாம். 3 முறை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் குறைந்தது 7 வருடங்களுக்கு EPF உறுப்பினராக இருக்க வேண்டும்.

உங்களுக்கு கிடைக்க கூடிய தொகையின் அளவானது, உங்கள் EPF பங்களிப்பு, உங்கள் ஓய்வூதிய இலக்கு தொகை மற்றும் கல்விக்குத் தேவையான நிதி போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. நீங்கள் வருங்கால வைப்பு நிதி விதிகளை கருத்தில் கொண்டால், தகுதிவாய்ந்த திரும்ப பெறுதலானது, ஊழியரின் பங்கு மற்றும் அதன் மீதான வட்டி அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதில் நிறுவனத்தின் பங்கு மற்றும் அதனுடன் வரும் வட்டி கருதப்படவில்லை, உங்கள் பங்கு மற்றும் வட்டி சில நியாயமான தொகையைப் பெற போதுமானதாக இருக்க வேண்டும், குறிப்பாக நீங்கள் உயர் படிப்புகளுக்கு திரும்பப் பெற விரும்பினால்.

கல்விக்காக வருங்கால வைப்பு நிதியைப் பயன்படுத்துவது, நீங்கள் ஓய்வூதிய நேரத்தில் இலக்கு வைத்திருக்கும் இலக்குத் தொகையை அடைவதற்கு கடினமாக இருக்கும். அதே நேரத்தில், கல்விக்கு எவ்வளவு தொகை தேவை என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, உங்களுக்கு ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது மற்றும் ஈபிஎஃப் வட்டி உட்பட உங்கள் பங்களிப்பு 8 லட்சம் மற்றும் நீங்கள் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ளன. நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை குறைவாக 4 லட்சம் ரூபாய் முன்பணம் பெறலாம். நீங்கள் ஓய்வூதியத்தை நெருங்கியுள்ளதால், நீங்கள் EPF திரும்ப பெறுவதை 30%ஆக குறைக்கலாம். இப்படி செய்தால், முன்பணம் தொகை 2.4 லட்சமாக குறையும். இடைவெளியை ஈடுசெய்ய நீங்கள் 2.60 லட்சம் ரூபாய் கடன் வாங்க வேண்டும்.

கல்விக்காக EPF திரும்ப பெறுவதற்கான செயல்முறை என்ன?

நீங்கள் EPFO ​​இன் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலைப் பார்வையிட வேண்டும். சான்றுகளைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

உங்கள் ஆன்லைன் இபிஎஃப் கணக்கு உருவாக்கப்படவில்லை என்றால், நீங்கள் அதை ஆன்லைனில் செய்யலாம். சான்றுகளில் உலகளாவிய கணக்கு எண் (UAN) மற்றும் கடவுச்சொல் ஆகியவை அடங்கும்.

உங்கள் UAN உங்களுக்குத் தெரியாவிட்டாலும், வேலைகளை மாற்றுவதன் மூலம் உங்களிடம் பல EPF கணக்குகள் இருந்தாலும், சில விவரங்களைக் குறிப்பிடுவதன் மூலம் அதை ஆன்லைனில் அறியலாம். அது முடிந்ததும், கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.

உங்கள் சான்றுகள் முடிந்ததும், நீங்கள் கணக்கில் உள்நுழைந்து 'ஆன்லைன் சேவைகள்' சென்று படிவம் 31 ஐக் கிளிக் செய்யலாம்.

படிவத்தில் கோரப்பட்ட விவரங்களை நிரப்பி உங்கள் நிறுவனத்திடம் சமர்ப்பிக்கவும், நிறுவனம் இதனை EPF அலுவலகத்திற்கு அனுப்பும்.

படிவத்துடன், பாடநெறி படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்திடமிருந்து மதிப்பிடப்பட்ட செலவு தொடர்பான சான்றிதழையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவரங்களை முழுமையாக சரிபார்த்து பின்னர் முன்கூட்டியே ஒப்புதல் அளிப்பார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment