epf balance check : தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வருங்காலத்திற்கு மற்றும் அவசர தேவைக்கு உங்கள் கணக்கில் போடப்படும் பிஎஃப் பணம் மிகவும் உபயோகமானது.
ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கான பிஎஃப் பணத்தை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சரியாக உங்கள் கண்க்கில் சேர்கிறதா? என்பது நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று. அதற்கு நீங்கள் பிஎஃப் ஆபிஸூக்கோ, அல்லது உங்கள் எச்.ஆரிடமோ அலைய வேண்டிய அவசியமில்லை.
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். //www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
epf balance check : என்னென்ன வசதிகள்!
கூடவே, மத்திய அரசு பிஎஃப் எடுத்தல் மற்றும் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு e-inspection system என்ற புதிய நடைமுறையும் அறிமும் செய்ய இருக்கிறது.
உங்களின் பீஎப் கணக்கில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்-ஐ கீழ்கண்டவாறு அனுப்ப வேண்டும்.EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்
தற்போது பிஎஃப் விவரங்களைப் பத்து மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் எஸ்எம்எஸ் மூலம் அறியும் வசதி உள்ளது.