Reduced EPF contribution, EPF, Employees Provident Fund, வருங்கால வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு, ஓய்வூதிய நிதிpension fund, EPFO, Pradhan Mantri Garib Kalyan Yojna, Ministry of Labour & Employment
EPF contribution:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதி ஆகியவை Employees Provident Fund’s and Miscellaneous Provisions Act, 1952 (EPF Act) மற்றும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதி ஆகியவற்றுக்கு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் ஆகிய இரண்டு தரப்பும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
அடிப்படை சம்பளத்தில் 12 சதவிகிதம், அகவிலைப்படி, மற்றும் retaining allowance (ஏதேனும் இருந்தால்) என்ற அளவில் பங்களிப்பு வீதம் இருக்கும். இந்த 12 சதவிகிதத்தில் 8.33 சதவிகிதம் ஓய்வூதிய நிதியிலும், 3.67 சதவிகிதம் வருங்கால வைப்பு நிதியிலும் டெப்பாஸிட் செய்யப்படும். 1997 ஆம் ஆண்டின் இந்திய அரசின் ஒரு அறிவிக்கையின்படி(notification) சில அறிவிக்கப்பட்ட (notified) நிறுவனங்களுக்கு இந்த வீதம் 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இவற்றில் 20க்கும் குறைவான பணியாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள், sick industries மற்றும் சணல் தொழில்கள் ஆகியவை இதில் அடங்கும்.
ஊரடங்கு காரணமாக தொழில்கள் முழுவதும் முடங்கியுள்ளதால் ஏற்பட்ட பணப்புழக்க நெருக்கடி, நிறுவனங்களுக்கு வருங்கால நிதி தொடர்பாக பல நிவாரணங்களை அறிவிக்க இந்திய அரசைக் கேட்டுக்கொண்டது:
100 க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் 90 சதவிகிதம் பணியாளர்கள் ரூபாய் 15,000/- க்கும் குறைவாக சம்பளம் வாங்கும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு செய்யும் பொருப்பை அரசு Pradhan Mantri Garib Kalyan Yojna வழிகாட்டுதல்களின் படி ஏற்றுக்கொண்டது. இந்த நிவாரணம் ஆகஸ்ட வரை கிடைக்கும்.
தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் நிறுவனங்களுக்காக மார்ச் மாதத்திற்கான பங்களிப்பு தேதி அரசாங்கத்தால் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
வருங்கால வைப்பு நிதி பங்களிப்பின் விகிதத்தை குறைப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய புள்ளிகள்:
# இந்த நிவாரணம் 3 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
# Pradhan Mantri Garib Kalyan Yojna திட்டத்தின் கீழ் நிவாரணத்திற்கு தகுதியான நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.
# 12% முதல் 10% வரை குறைப்பது வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பின் அளவை பாதிக்கும். ஓய்வூதிய நிதியை அல்ல. இதன் பொருள் 10% இல், 8.33% ஓய்வூதிய நிதியில் தொடர்ந்து டெபாசிட் செய்யப்படும் மற்றும் 1.67% வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்படும்.
# பிடித்தம் போக பணியாளர்கள் கைகளில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு அதிகரிக்கும் ஆனால் அதிகரிக்கும் சம்பளத்தின் அளவுக்கு ஏற்ப வருமான வரி செலுத்த வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil