Advertisment

EPFO News: பணம் வருவதில் சிக்கல்… உடனே இதை செய்யுங்கள்

ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில், உங்கள் நிறுவனம் செலுத்தும் தொகை கணக்கிற்கு வந்து சேராது

author-image
WebDesk
New Update
மார்ச் மாதத்தில் உறுதி செய்யப்படும் வட்டி; PF கணக்கர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துமா புதிய அறிவிப்பு?

தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் செயல்படுகிறது. ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை, இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.

Advertisment

இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாலும்,வரிச்சலுகை கிடைப்பதாலும், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், இந்த இபிஎஃப் கணக்கில் முக்கிய ஆவணம் ஒன்றை இணைக்காவிட்டால் பணம் செலுத்தப்படாது என்ற அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும், தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும் என epfo தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு PF கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியாகியது

அதன்படி, ஓரிரு நாள்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இனிமேல் காலஅவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில், உங்கள் நிறுவனம் செலுத்தும் தொகை கணக்கிற்கு வந்து சேராது. பணம் கணக்கிற்கு வருவதிலும் தாமதம் ஏற்படும். கூடுதலாக,கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்

PF கணக்குடன் ஆன்லைனிலேயே ஆதார் எண் இணைப்பது எப்படி?

  • முதலில் EPFO நிறுவனத்தின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளத்துக்கு செல்லவும்
  • அதில், UAN நம்பர் மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து Log in செய்ய வேண்டும்.
  • அதில் Manage பிரிவை கிளிக் செய்யவும்.
  • அதன் கீழ் திறக்கும் பக்கத்தில், Aadhaar ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் எண் மற்றும் பெயர் பதிவு செய்து Save செய்யவும்.
  • அதன்பின், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு PF கணக்குடன் உங்களது ஆதார் எண் எளிதாக இணைக்கப்பட்டுவிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Epfo Alert Tamil News Epfo Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment