மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும், EPF கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் EPF பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து பெற முடியும். இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், ஒரு மாத வேலையின்மைக்கு பிறகு இபிஎஃப் நிலுவை தொகையில் 75% வரையில் திரும்ப பெறலாம். இதே வேலையின்மை தொடர்ந்தால், மீதமுள்ள 25% தொகையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
மருத்துவ தேவைக்காக
ஊழியரின் மருத்துவ செலவு அல்லது ஊழியரின் கணவன்/மனைவிக்கான செலவு, அல்லது குழந்தைகளுக்கான மருத்துவ செலவுகளுக்கும் பணம் பெற முடியும். இதே பேரழிவு காலத்திலும் ஊழியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு இருப்பில் 50% வரை பெற்றுக் கொள்ள முடியும்.
திருமணம்
திருமண செலவுக்காக பணம் எடுக்கலாம் இது ஊழியரின் திருமணம் அல்லது ஊழியரின் குழந்தைகளுக்கான திருமணத்திற்கு கடன் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கும் ஊழியர் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் வைப்பு நிதி தொகையில் 50% வரை எடுத்துக் கொள்ளலாம்.
கல்வி செலவு
கல்வி செலவுக்காக எனில், ஒரு ஊழியர் அவரின் வைப்பு நிதி தொகையில் 50% வரை எடுத்துக் கொள்ளலாம். எனினும் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருந்த ஊழியர்கள் மட்டுமே இந்த தொகையை எடுக்க முடியும். இது ஊழியரின் குழந்தைகள் 10ம் வகுப்புக்கு மேலாக செல்லும் போது எடுத்துக் கொள்ளலாம்.
வீட்டு கடன்
வீட்டை வாங்க அல்லது புதுப்பிப்பதற்கான கடன் பெற சொத்து தொழிலாளர் அல்லது அவரின் மனைவி பெயரில் இருக்க வேண்டும் அல்லது இருவர் பெயரிலும் இருக்கலாம். வீட்டின் கட்டுமானம் கடன் பெற்ற ஐந்து வருட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும், 12 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும். வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். புதுப்பித்தல் பணியும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
வீட்டை புதுபிக்க
ஒருவர் தனது வீட்டை புதுப்பிக்க, அந்த வீடு விண்ணப்பதாரர் அல்லது அவரின் மனைவி அல்லது இருவரின் பெயரில் இருக்க வேண்டும். இதற்காக அவர் 5 ஆண்டு பணியில் இருக்க வேண்டும். ஒரு நபரின் அடிப்படை சம்பளத்தின் 12 மடங்கு வரை கடன் கிடைக்கும். இதே வீடு பழுது பார்க்க கடன் வாங்க 5 ஆண்டு பணியில் இருக்க வேண்டும். ஒரு நபரின் அடிப்படை சம்பளத்தின் 12 மடங்கு வரை கடன் கிடைக்கும். வீடு கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil