உங்கள் சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பு உண்டா? அப்ப நீங்க சந்தோஷப்பட ஒரு நியூஸ் இருக்கு!

ஆன்லைன் முறையிலோ விண்ணப்பிக்கத் தேவையும் இல்லை.

By: Updated: March 11, 2019, 11:01:49 AM

EPF Balance Check : தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் ஒருபக்கம் செயல்பட்டு வருகிறது. இபிஎப் திட்டத்தில், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி மாதா மாதம் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது இபிஎஃப் (Employees’ Provident Fund -EPF) கணக்கில் செலுத்தப்படுகிறது.

இப்படி பொதுமக்களின் பலனுக்காக ஏகப்பட்ட பலன்களை தரும் பிஎஃப் திட்டத்தில் இனி வரும் காலங்களில் சில மாற்றங்களுடன் செயல்பட இருக்கிறது. என்ன மாற்றம் அது? நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள்.

இதுவரை பிஎஃப் செலுத்துபவர்கள் தங்கள் பழைய கணக்குகளை புதிய கணக்குகளோடு ஒவ்வொரு முறையும் இணைக்க வேண்டும். அப்படி இணைக்க ஒவ்வொரு முறையும் நம் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இனி அப்படி பழைய கணக்குகளை புதிய கணக்குகளோடு இணைக்க வேண்டாம். நம் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் பிஎஃப் அலுவலகத்துக்கோ அல்லது ஆன்லைன் முறையிலோ விண்ணப்பிக்கத் தேவையும் இல்லை.

இனி யு.ஏ.என் எண்கள் மூலம் புதிய பிஎஃப் கணக்கோடு பழைய பிஎஃப் கணக்குகளை தானே இணைத்துக் கொள்ளப் போகிறதாம். ஒரு முறை புதிய பிஎஃப் கணக்கில், நாம் புதிதாக வேலைக்குச் சேர்ந்த நிறுவனம் பணம் போட்டால் உடனடியாக யு.ஏ.எண்-ஐ வைத்து பழைய கணக்குகளையும் புதிய கணக்குகளோடு ஒப்பிட்டு, சரி பார்த்து, இதற்கு முன் நம் பழைய பிஎஃப் கணக்கில் இருக்கும் அசல் மற்றும் வட்டியோடு புதிய கணக்கில் இணைத்துவிடுவார்களாம்.

அடேங்கப்பா…!பான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் அபராதம்!

ஒரு ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பிஎஃப் கணக்கு மாற்றங்கள் மற்றும் இணைப்புகளுக்கான விண்ணப்பங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Epf transfer on job change to become automated from next fiscal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X