நோட் பண்ணிக்கோங்க… இந்த காரணங்கள் இருந்தா மட்டும் தான் உங்களால் பிஎஃப் எடுக்க முடியும்!

இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது பணத்தை எடுக்க முடியாது.

PF apply online
PF apply online

epfindia.gov.in : மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் . இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எனப்படும் தினக்கூலிகள் தவிர்த்து, அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குத்தான் ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எப். தொகை, அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு, அதே தொகை அவர்கள் பணிபுரியும் நிறுவன பங்காகவும் அவர்களது பி.எப். கணக்கில் சேர்க்கப்படுகிறது.

இதில் ஊழியர்களின் சம்பள முறை, அடிப்படையில் இருந்தால், நிறுவன பங்காக செலுத்தப்படும் தொகையும் ஊழியரின் சம்பளத்திலிருந்தே பிடிக்கப்பட்டு செலுத்தப்படும். அதாவது ஒரு ஊழியருக்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் உள்ளிட்டவற்றுக்காக ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு செலவிட தீர்மானிக்கிறதோ, அது மொத்தமாக கணக்கிடப்பட்டு முதலிலேயே ஒருவருக்கு சம்பளம் இவ்வளவு என்று தெரிவிக்கப்படும்.

வேலையிலிருந்து ஓய்வு பெறும்போதோ, வேறு காரணங்களினால் நிரந்தரமாக வேலையை விட்டு விலகும்போதோ, பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். அதாவது, தொடர்ந்து 60 நாட் களுக்கு மேல் வேலையில் இல்லாமல் இருக்கும்போது பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். ஆனால், ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது பணத்தை எடுக்க முடியாது.

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

இந்த தகவலை இத்தனை நாள் தெரியாமல் இருந்தவர்கள் இனி கவனமாய் இருங்கள். அதே போல் இதுக் குறித்து தெரியாதவர்களுக்கு இந்த தகவலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Epfindia gov in withdraw from your employees provident fund epf account

Next Story
தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி!iob netbanking online
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com