EPFO News: ஆவணங்கள் தேவையில்லை; ஃபேமிலிக்கு கிடைக்கிற ரூ7 லட்சத்தை மிஸ் பண்ணாதீங்க!

ஆதார், பான், யுஏஎன், வங்கி கணக்கு அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு உறுப்பினர்களிடம் ஒருபோதும் EPFO கேட்காது.

ஆதார், பான், யுஏஎன், வங்கி கணக்கு அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு உறுப்பினர்களிடம் ஒருபோதும் EPFO கேட்காது.

author-image
WebDesk
New Update
EPFO News: ஆவணங்கள் தேவையில்லை; ஃபேமிலிக்கு கிடைக்கிற ரூ7 லட்சத்தை மிஸ் பண்ணாதீங்க!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இ நாமினேஷனை தாக்கல் செய்வது அவசியமாகும்.

இபிஎஃப் இ நாமினேஷன்

Advertisment

பிஎஃப் மற்றும் பென்சன் தொடர்பாக ஆன்லைன் பரிவர்த்தனைக்கு இ நாமினேஷன் அவசியமாகும். இதுதவிர, பணியாளர்கள் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI) கீழ் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 7 லட்சம் வரையிலான காப்பீட்டையும் உறுதி செய்கிறது.

மேலும், தேவைப்படும் சமயத்தில் நாமினி விவரங்களை மாற்றுக்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்படுகிறது.
இதனை செய்திட சுய அறிவிப்பு மட்டுமே போதுமானது. எவ்வித ஆவணங்களோ அனுமதிகளோ தேவையில்லை.

ஆன்லைனில் இ நாமினேஷன் செய்வது எப்படி?

  • முதலில் epfoவின் https://www.epfindia.gov.in/site_en/index.php என்கிற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் Service செக்ஷனில் For Employees கிளிக் செய்ய வேண்டும். கணினியில் புதிய திரை தோன்றும்.
  • அதில், 'Member UAN/Online Service' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, UAN நம்பர் மற்றும் Password பதிவிட்டு லாகின் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக, 'Manage Tab' கீழ் 'e-Nomination' செலக்ட் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, "Provide Details' tab திரையில் தோன்றும், நீங்கள் saVE கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், YESஐ தேர்வு செய்து, குடும்ப விவரத்தை அப்டேட் செய்ய வேண்டும்.
  • அங்கிருக்கும், Add family details'கிளிக் செய்து, கூடுதலாக மற்றொரு நாமினியை சேர்த்துக்கொள்ளலாம்.
  • பின்னர், Nomination Details' இல் நீங்கள் கொடுக்க விரும்பும் ஷெரை தேர்வுசெய்து, Save EPF Nomination கொடுக்க வேண்டும்.
  • இறுதியாக, E-Sign கிளிக் செய்தால், ஓடிபி நம்பர் வரும். அதனை சப்மிட் செய்தால் போது, நாமினேஷன் EPFoஇல் ரெஜிஸ்டர் ஆகிவிடும்.
Advertisment
Advertisements

குறிப்பு: ஆதார், பான், யுஏஎன், வங்கி கணக்கு அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு உறுப்பினர்களிடம் ஒருபோதும் EPFO கேட்காது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Epfo Alert Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: