ஒரு மணி நேரத்தில் ரூ. 1 லட்சம்; மருத்துவ சிகிச்சைக்காக இ.பி.எஃப்-ல் இருந்து பணம் எடுப்பது எப்படி?

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த முறையில் எந்த வகையான மருத்துவ பில்களையும் சர்பிக்காமல் பணத்தினை வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியும்.

கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா சிகிச்சைக்காக லோன் தரும் வங்கிகள் குறித்து நாம் கேட்டறிந்துள்ளோம். இந்நிலையில் தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்தும் நீங்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 1 லட்சம் வரையில் எடுத்துக் கொள்ளும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் மருத்துவ தேவைகளுக்கு பி.எஃப். பணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களின் மருத்துவ சான்றுகளை சமர்பிக்க வேண்டும். அதன் பின்பு தான் பணம் கிடைக்கும். ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த முறையில் எந்த வகையான மருத்துவ பில்களையும் சர்பிக்காமல் பணத்தினை வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியுமாம்.

மருத்துவ சிகிச்சை முன்தொகையை பிற சில நிபந்தனைகள் உள்ளன

உங்களுக்கோ அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் பெறுகிறீர்கள் என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் இருக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பி.எஃப். அலுவலர் நேரில் வந்து விசாரித்து பிறகே பணம் வழங்க ஏற்பாடுகளை துவங்குவார்.

ஊழியர் அல்லது எந்தவொரு குடும்ப உறுப்பினரும் மருத்துவமனை மற்றும் நோயாளியின் விவரங்களைக் கொடுக்கும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், செலவு குறித்த எந்த மதிப்பீடும் இல்லை என்றும் தெரிவிக்க வேண்டும்.

பணம் தேவை என்று விண்ணப்பித்த ஒரு மணிநேரத்தில் பணம் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கும்.

கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மருத்துவ முன்பணத்தில் இருந்து முற்றிலும் இது வேறுபட்டது. மே மாதம் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி, நீங்கள் உங்கள் கணக்கில் இருந்து 75% பணத்தை பெற்றுக் கொள்ள இயலும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Epfo alert get rs 1 lakh in just one hour during medical emergency

Next Story
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 150 வரை கட்டணம்; ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் புதிய விதிமுறைகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com