/tamil-ie/media/media_files/uploads/2021/12/EPFO-1.jpg)
EPFO Alert in Tamil : ஒவ்வொரு மாதமும் தங்களின் சம்பளத்தில் வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக இந்தியாவில் பெரும்பான்மையான சம்பளக்காரர்கள் தொழிலாளர் வைப்பு நிதியை வைத்துள்ளனர். வேலை பார்க்கும் போதே மரணம் ஏற்பட்டாலோ அதன் பின்னர் மரணம் அடைந்தாலோ தங்களின் பி.எஃப். கணக்கில் இருக்கும் நிதி யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு கணக்கரும் தங்களின் பி.எஃப். கணக்கு தொடர்பான விவரங்களில் குறிப்பிட வேண்டும்.
தற்போது இ.பி.எஃப்.ஒ வெளியிட்டுள்ள அறிக்கையில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களின் அனைத்து பி.எஃப். நலன்களையும் பெற டிசம்பர் 31ம் தேதிக்குள் தங்களின் நாமினி தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளீடாக தர வேண்டும் என்று கூறியுள்ளது.
காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பி.எஃப். தொகை மூலமாக தங்களின் பெற்றோர்கள், துணை மற்றும் குழந்தைகளின் நலன்களை பாதுகாக்க இதனை கட்டாயமாக செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாமினி நாமினேஷன் செய்வது எப்படி?
முதலில் இ.பி.எஃப்.ஓவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லுங்கள்
அதில் சர்வீஸ் என்பதன் கீழ் இருக்கும் ஃபார் எம்ப்ளாயிஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்
பிறகு அதில் 'Member UAN/Online Service (OCS/OTCP)' என்பதை தேர்வு செய்யவும்
உங்களின் யு.ஏ.என். மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து லாக் இன் செய்யவும்
மேனேஜ் என்பதன் கீழ் உங்களின் இ-நாமினேஷனை தாக்கல் செய்ய இயலும்.
உங்கள் ஃபேமிலி டிக்ளரேஷனை நீங்கள் மாற்ற விரும்பினால் அதில் “Add family details” என்பதை தேர்வு செய்யவும்
ஒன்றுக்கும் மேற்பட்டோரை நீங்கள் நாமினியாக தேர்வு செய்துக் கொள்ள இயலும் என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.