EPFO வாடிக்கையாளர்கள் தங்களின் பான், ஆதார், வங்கி கணக்கு மற்றும் ஒடிபி தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என இபிஎஃப் அமைப்பு எச்சரித்துள்ளது.
EPFO தொடர்பான புகார்கள் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் இபிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அந்தப் புதிய எச்சரிக்கையில், சமூக வலைதளம் அல்லது தொலைபேசி வாயிலாக யாரேனும் தங்களின் இபிஎஃப் எண், வங்கி எண், ஓடிபி ஆகிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். அவர்களின் வலையில் விழ வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "எந்தவொரு சேவைகளுக்கும், வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் எந்த பணத்தையும் டெபாசிட் செய்ய EPFO ஒருபோதும் கேட்பதில்லை" என இபிஎஃப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “தனிப்பட்ட விவரங்கள் மற்றும் இதர தகவல்கள் கேட்கும் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம். EPFO உறுப்பினர்கள் தங்கள் ஆன்லைன் ஆவணங்களின் பாதுகாப்பை பராமரிப்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்.
சில EPFO சேவைகளை DigiLocker மூலம் அணுக முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்” என தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
DigiLocker என்பது ஆவணம் மற்றும் சான்றிதழ் சேமிப்பு, பகிர்வு மற்றும் சரிபார்ப்புக்கான பாதுகாப்பான தளமாகும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில், இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யலாம்.
டிஜிலாக்கரில் (DigiLocker) கிடைக்கும் EPFO சேவைகள்:
1) UAN அட்டை
2) ஓய்வூதியம் செலுத்தும் ஆணை (PPO) ஆகியவை ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”