/tamil-ie/media/media_files/uploads/2020/07/a49.jpg)
வங்கிகள் இணைப்பு காரணமாக பல வங்கிகளின் IFSC code மாற்றப்பட்டுள்ளது. இதனால் EPFO முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து PF வாடிக்கையாளர்களும் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை அப்டேட் செய்யுமாறு தெரிவித்துள்ளது.
இது குறித்து EPFO வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆந்திர வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகிய வங்கிகள் பிற வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வங்கிகளின் கணக்குகள் PF அக்கவுண்டில் இணைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆன்லைனில் கிளைம் செய்ய முடியாது. சரியான IFSC ஐ வங்கியில் இருந்து பெற்று விவரங்களை பதிவேற்றம் செய்து ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான் ஆன்லைனில் க்ளைம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IFSC code எப்படி அப்டேட் செய்வது?
UAN(Universal Account Number) என்பது ஒவ்வொரு PF உறுப்பினருக்கும் EPFO ஆணையத்தால் வழங்கப்படும் எண் ஆகும். இந்த UAN எண்ணின் மூலம் PF உறுப்பினர்கள் தங்களின் PF கணக்குகளை தாங்களே எளிதாக அணுக முடியும். https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய UAN மற்றும் Password பதிவிட்டு உள்நுழையவும்.
பின்னர் Manage என்பதை கிளிக் செய்து KYC என்பதை தேர்ந்தெடுக்கவும்.
அதில் வங்கி கணக்கு எண் தோன்றும். அதை கிளிக் செய்து புதிய IFSC code என்டர் செய்து save செய்யவும்.
இந்தத் தகவல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, KYC update ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.