Advertisment

பி.எஃப் பணத்தை இனி சீக்கிரம் பெறலாம்; இ.பி.எஃப்.ஓ செயலியில் முக்கிய மாற்றம்

இ.பி.எஃப்.ஓ சாப்ட்வேர் அப்கிரோடு செய்யப்பட்டுள்ளது அதன் பயன்பாட்டை வேகமாக்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
Rejection of final EPF claims sees surge in 5 years up from 13 to 34 percentage Tamil News

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) ஊழியர்கள் பணம் எடுப்பது தொடர்பான கோரிக்கைகளை செயல்படுத்துவது இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இந்த ஆகஸ்ட்- செப்டம்பரில் 30% வேகப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி அமைப்பின் டிஜிட்டல் தளத்தின் சமீபத்திய மென்பொருள் அப்டேட் காரணமாக இது சாத்தியமாகி உள்ளது. 

Advertisment

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC), இ.பி.எஃப்.ஓகான புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளது. இது ஊழியர்களின்  கோரிக்கைகளை விரைவில் சரிபார்க்க உதவுகிறது. அதே நேரம் கோரிக்கை நிராகரிப்பு செய்வதை குறைக்கிறது.  குறிப்பாக ஓய்வு பணத்தை பெறுவதில் உள்ள சிரமத்தை இது குறைக்கிறது.  

இதுகுறித்துப் பேசிய இ.பி.எஃப்.ஓ மூத்த அதிகாரி ஒருவர், சாப்ட்வேர் அப்கிரோடு 6 வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. பீக் ஹவர்ஸில் இ.பி.எஃப்.ஓ செயலி பயன்படுத்துவது இப்போது இரட்டிப்பாகியுள்ளது. முன்போ போல் இல்லாமல் ஊழியர்கள் சிரமமின்றி பயன்படுத்த முடியும். சாப்ட்வேர் போல் ஹார்டுவேரும் அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment