ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2020-21 நிதியாண்டில் (FY) 22.55 கோடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 8.50 சதவீத வட்டி விகிதத்தை வரவு வைத்துள்ளது என்று ஓய்வூதிய நிதி அமைப்பு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
"2020-21 நிதியாண்டில் 22.55 கோடி கணக்குகளுக்கு 8.50% வட்டியுடன் வரவு வைக்கப்பட்டுள்ளன" என்று EPFO ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
30 அக்டோபர் 2021 தேதியிட்ட சுற்றறிக்கையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை EPFO அறிவித்தது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 1952 இன் பாரா 60(1) இன் கீழ், 2020-21 ஆம் ஆண்டுக்கான வட்டியை 8.50 சதவீதத்தில் ஒவ்வொரு உறுப்பினரின் கணக்கிலும் EPF திட்டம், 1952, EPF திட்டத்தின் பாரா 60 இன் கீழ் உள்ள விதிகளின்படி செலுத்துவதற்கான மத்திய அரசின் ஒப்புதலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. என EPFO அதன் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
EPFO உறுப்பினர்கள் தங்கள் PF இருப்பை ஆன்லைனில் சரிபார்க்க 4 வழிகள் உள்ளன
1) PF இருப்பைச் சரிபார்க்க, EPFO உறுப்பினர்கள் EPFOHO UAN ENG என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
2) பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் 011-22901406 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கலாம். அதன் பிறகு அவர்கள் PF கணக்கு இருப்பு விவரங்களுடன் ஒரு SMS பெறுவார்கள்.
3) பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் EPFO இணையதளம் வழியாகவும் PF இருப்பை சரிபார்க்கலாம்
4) உங்கள் UAN மற்றும் OTP மூலம் உள்நுழைந்த பிறகு UMANG செயலியில் உங்கள் PF இருப்பு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil