The Central Employee Provident Fund Organization (EPFO) offers several online facilities to the PF subscribers so that they don’t have to pay visit to the regulatory body’s office for minor updates and filing e-nomination is one of them:மத்திய பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிஎஃப் சந்தாதாரர்களுக்கு பல ஆன்லைன் வசதிகளை வழங்கி வருகிறது. இதனால் அவர்கள் இ-நாமினேஷன் போன்ற சிறிய புதுப்பிப்புகளுக்கு ஒழுங்குமுறை அமைப்பின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.
ஈபிஎஃப் உறுப்பினர்கள் ஈபிஎஃப் நாமினியை மாற்ற புதிய நியமனத்தை தாக்கல் செய்யலாம். உங்கள் கணக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளைச் சேர்க்கலாம். ஈபிஎஃப்ஓ தனது சமீபத்திய ட்வீட்டில் இ-நாமினேஷன் தாக்கல் செய்வதன் 3 பெரிய நன்மைகள் குறித்து பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "ஈபிஎஃப்ஓ (EPFO) இ-நாமினேஷனை தாக்கல் செய்வது பிஎஃப் (PF) சந்தாதாரர் இறந்தவுடன் ஆன்லைன் க்ளைம் தீர்வுக்கான பலன்களை வழங்குகிறது, பிஎஃப், ஓய்வூதியம் மற்றும் தகுதியான நாமினிகளுக்கு ரூ. 7 லட்சம் வரையிலான காப்பீடு ஆகியவற்றை ஆன்லைனில் செலுத்துதல், காகிதமற்ற மற்றும் விரைவான உரிமைகோரல் தீர்வு" என்று குறிப்பிட்டுள்ளது.
Benefits of filing e-Nomination.#EPF #SocialSecurity #eNomination #AmritMahotsav @AmritMahotsav pic.twitter.com/qfUgvofhbd
— EPFO (@socialepfo) May 24, 2022
இதற்கிடையில், நீங்கள் இன்னும் உங்கள் ஈபிஎஃப்ஓ இ-நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை என்றால், உங்களுக்கான எளிய செயல்முறை இங்கு ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
முதலில் அதிகாரப்பூர்வ ஈபிஎஃப்ஓ (EPFO) இணையதளத்திற்குச் செல்லவும். https://www.epfindia.gov.in/site_en/index.php
பின்னர் அதில் சேவைகளுக்கு (Services) என்பதற்கு செல்லவும்.
இதன்பின்னர் ‘ஊழியர்கள்’ ( Employees) பகுதிக்குச் செல்லவும்
தொடர்ந்து 'உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவை’ (Member UAN/Online Service) என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது, UAN எண் மற்றும் உங்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் EPFO கணக்கில் உள்நுழையவும்
பின்னர், 'மேனேஜ் டேப்' 'Manage Tab' என்பதற்குச் சென்று, 'இ-நாமினேஷன்' 'E-Nomination' என்பதைக் கிளிக் செய்யவும்
இப்போது நீங்கள் அடுத்த பக்கத்தை அடைவீர்கள்
அதில் மாற்றங்களைச் செய்ய ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்
பின்னர் உங்கள் மின்-நாமினேஷன் விவரங்களைப் புதுப்பிக்கவும்.
OTP வழியாக விவரங்களைச் சரிபார்த்து ‘Save EPF நியமனம்’ (Save EPF Nomination) பொத்தானைக் கிளிக் செய்து, ‘E-sign’ விருப்பத்தைத் தட்டவும்.
இப்படியாக உங்கள் ஈபிஎஃப்ஓ இ-நாமினேஷனை தாக்கல் செய்து கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.