Advertisment

இரட்டிப்பு தொகை; 30 ஆயிரம் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

EPFO ​​பணியாளர்களின் திடீர் மரணம் காரணமாக, உறவினர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
EPF Nomination: ரூ.7 லட்சம் இன்சூரன்ஸ், பென்ஷன்.. இன்னும் பல நன்மைகள்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காகக் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையை ஓய்வுக் காலத்தில் உதவியாக இருக்கும். இந்நிலையில், EPFO சந்தாதாரர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வந்துள்ளது.

Advertisment

பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. EPFO ​​பணியாளர்களின் திடீர் மரணம் காரணமாக, உறவினர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது.

இதன் மூலம் 30 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சுற்றறிக்கையை EPFO ​​அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது.

EPFO வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஒரு ஊழியரின் கோவிட் அல்லாத மரணம் அதாவது இயற்கை மரணம் ஏற்பட்டால், அவரது குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

2006ல் சார்பதிவாளர்களுக்கு, 50,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த தொகையானது 50 ஆயிரத்திலிருந்து, 4.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இப்போது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் 10 சதவிகிதம் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து மரணம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த தொகை வாரியத்தின் ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். நல நிதியில் இருந்து இத்தொகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒருவேளை ஊழியர் கொரோனாவால் உயிரிழந்தால், 2020 ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ESIC) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு தனியார் துறை ஊழியர் கொரோனாவால் இறந்தால், கோவிட்-19 நிவாரணத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

இதன் கீழ், காப்பீடு செய்யப்பட்ட ஊழியரின் தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் ஒவ்வொரு மாதமும் சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்படும். இறந்தவரின் மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் அல்லது இரண்டாவது திருமணம் வரையிலும், மகனுக்கு 25 வயது வரையிலும், மகளுக்கு திருமணம் ஆகும் வரையிலும் இந்த சலுகை வழங்கப்படும். குறைந்தபட்ச நிவாரணமாக மாதம் 1,800 ரூபாய் வழங்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Epfo Alert Tamil News Epfo Update Epfo Balance Check
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment