EPFO Fund Transfer: புதிய வேலைகளுக்கு செல்லும் போது பல நேரங்களில் நாம் நம்முடைய பி.எஃப். கணக்கை மாற்ற மறந்துவிடுவோம். சில நேரங்களில் நம்முடைய பழைய நிறுவனம், நாம் எப்போது அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்பதை அப்டேட் செய்யாமல் விட்டுவிடுகிறது. இதனால் நாம் நம்முடைய கணக்கில் இருக்கும் பாக்கியை புதிய கணக்கிற்கு மாற்றுவதற்குள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறோம். இந்நிலையில், தற்போது பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
நம்முடைய நிறுவனங்கள் மட்டும் தான் முதலில் நாம் வேலையில் சேர்ந்த நாள் மற்றும் நின்ற நாட்களை அப்டேட் செய்யும். ஆனால் இதனை அட்பேட் செய்வதில் ஏற்படும் தாமதநிலை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் கணக்கை மாற்றும் போது ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது பணியாளர்களே தாங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு நின்றால் அட்ந்த தேதியை அப்டேட் செய்து கொள்ள இயலும். இந்த புதிய அப்டேட்டினால் இனி பணத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றுவது அல்லது இ.பி.எஃப். ஓ. கணக்கை “க்ளோஸ்” செய்வது போன்றவை எளிமையாகிறது.
unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface இணையத்திற்கு செல்லவும்
யூ.ஏ.என், பாஸ்வேர்ட் மற்றும் கேப்ச்சா ஆகியவற்றை உள்ளீடாக தந்து லாக் - இன் செய்யவும்.
புதிதாக வரும் பாப்-அப்பில் மேனேஜ் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
அடுத்ததாக ExitStep என்ற ஆப்சனை காட்டும்.
அதில் எம்ப்ளாய்மெண்ட் என்ற பகுதி உங்கள் யூ.ஏ.எண்ணில் இணைக்கப்பட்டிருக்கும் பழைய பி.எஃப். எண் காட்டும்.
அதில் நீங்கள் எந்த காரணத்திற்காக, எப்போது வேலையைவிட்டு நின்றீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
பிறகு ரெக்வஸ்ட் ஓடிபியை க்ளிக் செய்யவும்.
பிறகு உங்களுக்கு கிடைத்த பாஸ்வேர்டை உள்ளீடாக கொடுத்து பாக்ஸ்டெப்பை க்ளிக் செய்யவும்.
அப்டேட் கொடுத்தவுடன் நீங்கள் வேலை விட்டு நின்ற தேதி அப்டேட் ஆகிவிடும். இருப்பினும் இந்த ப்ரோசஸ் முழுமை அடைய இரண்டு மாதங்கள் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil