scorecardresearch

EPFO Higher Pension: கூடுதல் பென்ஷன் பணம் விரும்புறீங்களா? உங்க பங்கு இவ்ளோ கம்மிதான்!

உச்ச நீதிமன்றம் நவம்பர் 2022 தீர்ப்பில், உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தில் 1.16% வீதம் மாதத்திற்கு ரூ. 15,000 என்ற வரம்பை மீறும் அளவிற்கு பங்களிக்க வேண்டும் என்று கூறியது.

PAN-Aadhaar linking and special FDs deadlines in June
EPFO இரண்டாவது முறையாக EPS-ல் இருந்து அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் உறுப்பினர்களுக்கு 1.16% கூடுதல் பங்களிப்பானது, வருங்கால வைப்பு நிதியில் முதலாளிகளின் பங்களிப்பின் ஒட்டுமொத்த 12% க்குள் இருந்து எடுக்கப்படும். இதன் விளைவாக, ஓய்வூதிய நிதிக்கான முதலாளியின் பங்களிப்பு தற்போதைய 8.33% இல் இருந்து 9.49% ஆக இருக்கும்.

இதனை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செப்டம்பர் 1, 2014 முதல் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.
அதாவது, வருங்கால வைப்பு நிதியில் முதலாளிகளின் மொத்த பங்களிப்பில் 12% க்குள் இருந்து 1.16% கூடுதல் பங்களிப்பை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, உச்ச நீதிமன்றம் நவம்பர் 2022 தீர்ப்பில், உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தில் 1.16% வீதம் மாதத்திற்கு ரூ. 15,000 என்ற வரம்பை மீறும் அளவிற்கு பங்களிக்க வேண்டும் என்று கூறியது.
இந்த நிலையில், “மேலே உள்ள அறிவிப்புகளின் வெளியீட்டில், நவம்பர் 4, 2022 தேதியிட்ட தீர்ப்பில் உள்ள அனைத்து உச்ச நீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டுள்ளன” என்று அமைச்சகம் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Epfo higher pension 1 16 to be taken from employers contribution