ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிக இபிஎஸ் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியை 15 நாள்களுக்கு நீட்டித்துள்ளது.
தகுதியான உறுப்பினர்கள் தற்போது ஜூலை 11, 2027 வரை உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். முதலாளிகளுக்கான கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊதிய விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தகுதியான ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு 15 நாட்கள் கடைசி அவகாசம் வழங்கப்படுகிறது.
அதன்படி, பணியாளர்கள் விருப்பம் / கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 11.07.2023 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPFO தரவுகளின்படி, 26.06.2023 வரை விருப்பம்/கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்காக 16.06 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“