/indian-express-tamil/media/media_files/2025/08/21/epfo-2025-08-21-18-41-09.jpg)
இ.பி.எஃப்.ஓ. ஊழியர்களுக்கு புதிய சலுகை: பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் - எப்போது அமல்?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ), அதன் மத்திய வாரிய ஊழியர்களுக்கான உயிரிழப்பு நிவாரண நிதியை (Death Relief Fund) ரூ.8.80 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் ஏப்.1, 2025 முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
நிவாரணத் தொகை அதிகரிப்பு: பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு (வாரிசுதாரர் அல்லது சட்டபூர்வ வாரிசு), ஊழியர் நல நிதியிலிருந்து (Staff Welfare Fund) இந்த ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகை ஏப்ரல் 1, 2026 முதல் ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரிக்கப்படும் என்றும் இ.பி.எஃப்.ஓ தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 19, 2025 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Central Provident Fund Commissioner) மற்றும் மத்திய ஊழியர் நலக் குழுவின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.பி.எஃப்.ஓ-வின் 2025-ம் ஆண்டு முக்கிய மாற்றங்கள்
இந்த ஆண்டு, இ.பி.எஃப்.ஓ தனது உறுப்பினர்களுக்கு பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மரண உரிமை கோரல் எளிமைப்படுத்தல், இனி மைனர் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் மரண உரிமை கோரல் தொகையைச் செலுத்துவதற்குப் பாதுகாவலர் சான்றிதழ் (Guardianship Certificate) தேவைப்படாது.
கூட்டு அறிவிப்பு செயல்முறை எளிமைப்படுத்தல்: UAN எண்ணுடன் ஆதார் இணைக்கப்படாத அல்லது ஆதார் விவரங்களில் திருத்தம் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு, இந்த செயல்முறை மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள், பி.எஃப் (PF) சந்தாதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விரைவான மற்றும் எளிமையான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மத்திய அறங்காவலர் வாரியம் (Central Board of Trustees) என்பது, இ.பி.எஃப்.ஓ-வின் மிக உயர்ந்த கொள்கை வகுக்கும் அமைப்பாகும். இதில் மத்திய, மாநில அரசுகள், முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.