/tamil-ie/media/media_files/uploads/2021/11/epfo-2.jpg)
Employees Provident Fund Organization (EPFO) Nomination Rules: தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. PF கணக்கு வைத்திருப்பவர்கள், மின்னணு முறையில் நாமினேஷனை தாக்கல் செய்வதன் மூலம் தொந்தரவு இல்லாத மற்றும் விரைவான ஆன்லைன் சேவைகளையும்
ரூ.7 லட்சம் வரை காப்பீட்டையும் பெறலாம்.
EPF ONLINE NOMINATION செய்தால் உறுப்பினர் இறந்தவுடன் ஆன்லைன் உரிமைகோரல் முறையில் தீர்வு அளிக்கப்படும். காகிதமற்ற மற்றும் விரைவான கோரிக்கை முறையில் தீர்வு காணப்படும்.
PF மற்றும் ஓய்வூதியத்தை ஆன்லைனில் செலுத்த முடியும். தகுதியான நாமினிகளுக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு அளிக்கப்படும்.
ஜனவரி 2022 இல் EPFO 15.29 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. மாதந்தோறும் சம்பளப்பட்டியல் தரவுகளை ஒப்பிடுகையில், கடந்த ஜனவரியில் 15.29 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
இதனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8.64 லட்சம் புதிய உறுப்பினர்கள் EPF & MP சட்டம், 1952 இன் சமூகப் பாதுகாப்பு வரம்பில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.