epfo-update | epfo-alert-tamil-news | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒவ்வொரு நிதியாண்டுக்கும் வட்டி விகிதங்களை திருத்தம் செய்து அறிவிக்கிறது.
இதன்படி, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்தந்த நிதியாண்டில் அவர்களின் வைப்புத்தொகைக்கு ஏற்ப வட்டி வழங்கப்படும்.
இந்த நிலையில், இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி குறித்து சனிக்கிழமை (பிப்.10,2024) முடிவு எடுக்கப்படும்.
இதற்காக, மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 10-ம் தேதி கூடுகிறது. இதில் 2023-24 நிதியாண்டில் சந்தாதாரர்களுக்கு செலுத்த வேண்டிய வட்டியை வாரியம் முடிவு செய்யலாம்.
ஊடக அறிக்கைகளின்படி, இந்த ஆண்டில், மத்திய அறங்காவலர் குழு 2024 நிதியாண்டில் சுமார் 8 சதவீத வட்டி விகிதத்தை பரிந்துரைக்கலாம்” எனக் கூறப்படுகிறது.
ஓய்வூதிய நிதி அமைப்பு அதன் பங்குகளில் முதலீட்டை சுமார் 10 இல் இருந்து அதிகரிக்க வாரியத்தின் ஒப்புதலைப் பெற வாய்ப்புள்ளது.
2022-23 நிதியாண்டில் இபிஎஃப் வட்டி விகிதம் 8.15 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 2021-22ல் இது 8.10 சதவீதமாக இருந்தது. எனினும், இந்த முறை வட்டி விகிதம் பகிரங்கமாக அறிவிக்கப்படுமா அல்லது புதிய வழிகாட்டுதல்களின்படி, நிதி அமைச்சகத்தின் அனுமதிக்குப் பிறகு அறிவிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், 2023-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதங்களை நிதி அமைச்சகத்தின் முன் அனுமதியின்றி பகிரங்கமாக அறிவிக்க வேண்டாம் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“