EPFO interest rates reduced by 15 bps to 8.5 : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அறங்காவலர் வாரிய குழு கடந்த வியாழன் அன்று பிஎப் (PF) 2019-20 ஆம் ஆண்டுக்கான வைப்புக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவிகிதமாக நிர்ணயம் செய்தது. சுமார் 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இந்த நடவடிக்கையின் மூலம் பயனடைவார்கள். இதன் மூலம் ஓய்வூதிய நிதி அமைப்பான இதற்கு ரூபாய் 700 கோடிக்கும் அதிகமான உபரி பெற உதவும்.
8.5 சதவிகிதம் என்ற வகிதத்திலும் அரசு நடத்தும் பல சிறுசேமிப்பு திட்டங்களான Monthly Income Account (7.6%), National Savings Certificate (7.9%), Public Provident Fund (7.9%), Kisan Vikas Patra (7.6%) and Sukanya Samriddhi Account Scheme (8.4%), விட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தான் இன்னும் சிறந்த ஆதாயத்தை தரும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் மட்டும் தான் ஓரளவுக்கு கூடுதல் ஆதாயம் கிடைக்கும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தனது சந்தாதாரர்களுக்கு 8.65 சதவிகித வட்டி விகிதத்தை 2018-19 லும், 8.55 சதவிகிதத்தை 2017-18 லும், 8.65 சதவிகிதத்தை 2016-17 லும், 8.55 சதவிகிதத்தை 2017-18 லும் வழங்கியது. வட்டி விகிதம் அதிகமாக 8.8 சதவிகிதமாக 2015-16 ல் இருந்தது. 8.65 சதவிகித வட்டியை செலுத்திய பிறகு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 2018-19 ல் ரூபாய் 150 கோடியை உபரியாக உருவாக்கியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
ரூபாய் 15,000/- க்கு கீழ் வருவாய் உள்ள 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிசெய்கிற நிறுவனங்களில் கட்டாயம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர வேண்டும் என Employees’ Provident Fund & Miscellaneous Provisions Act, 1952 சட்டம் கூறுகிறது. மற்றவர்கள் இந்த திட்டத்தில் தானாக முன்வந்து சேரலாம். ஒரு ஊழியர் தனது அடிப்படை சம்பளத்தில் 12 சதவிகிதத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பாக செலுத்துவார். அவரது முதலாளி 3.67 சதவிகிதத்தை பங்களிப்பாக செலுத்துவார். மீதமுள்ள 8.33 சதவிகிதம் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்துக்கு சென்று விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.