தீபாவளிக்கு முன்பு 8.5% வழங்க நடவடிக்கை: உங்க பி.எஃப் அக்கவுண்டில் பணம் வந்து சேர்ந்து விட்டதா?

தீபாவளிக்கு முன்பு பிஎஃப்பில் பணம் எடுக்க திட்டமிட்டிருப்பவர்கள், இந்தாண்டுக்கான வட்டி தொகை வந்துவிட்டதா என்பதை பார்த்துக்கொண்டு எடுப்பது சிறந்த தேர்வு ஆகும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) 1976ன் கீழ், அதன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது.

இந்நிலையில், EPFO தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி முன்பு இனிப்பான செய்தி ஒன்றை வெளியிட்டது. கணக்கு வைத்திருக்கும் 6 கோடி வாடிக்கையாளர்களுக்கும் 2020-21ஆம் நிதியாண்டுக்கான PF வட்டித் தொகை இம்மாத இறுதிக்குள் செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் குஷி அடைந்துள்ளனர்.

தீபாவளிக்கு முன்பு பிஎஃப்பில் பணம் எடுக்க திட்டமிட்டிருப்பவர்கள், இந்தாண்டுக்கான வட்டி தொகை வந்துவிட்டதா என்பதை பார்த்துக்கொண்டு எடுப்பது சிறந்த தேர்வு ஆகும்.

பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுக்கும் வழிமுறைகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

  • முதலில் http://www.epfindia.gov.in என்ற வெப்சைட்டில் சென்று அதில் ‘Online Advance Claim’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • Online Service பக்கத்தில் உள்ள Claim (Form-31,19,10C & 10D) ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டின் கடைசி நான்கு இலக்கங்களைப் பதிவிட்டு வெரிஃபை செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் ’Proceed’ கொடுக்க வேண்டும்.
  • அடுத்ததாக டிராப் டவுன் பாக்ஸில் ’PF Advance’ என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும்.
  • எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதைப் பதிவிட்டு காசோலையின் ஸ்கேன் காப்பியை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக ’Get Aadhaar OTP’ என்பதை கிளிக் செய்தால் மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட வேண்டும். submit கொடுத்தவுடன் கோரிக்கை ஏற்கப்படும்.

குறிப்பு: மெடிக்கல் எமர்ஜென்ஸியாக பணம் எடுக்கும் பட்சத்தில், உங்களின் பிஎஃப் பணம் அரை மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

EPFO 2020-21ஆம் ஆண்டுக்கான வட்டி தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கில் செலுத்தி வருகிறது. வட்டி தொகை உங்கள் கணக்கிற்கு வந்துவிட்டதா என்பதை வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஃப் எண்ணுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.

எஸ்எம்எஸ் வழிமுறை

EPFOHO UAN ENG என்று பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதில் கடைசி மூன்று எழுத்துகள் தேர்ந்தெடுக்கும் மொழியை குறிக்கிறது.நீங்கள் இந்தியில் எஸ்எம்எஸ் பெற விரும்பினால், ‘EPFOHO UAN HIN’ என மெசேஜ் அனுப்ப வேண்டும்.

மிஸ்ஸூடு கால் முறை

011-22901406 என்ற எண்ணுக்கு பிஎஃப் கணக்குடன் பதிவுசெய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் பிஎஃப் பேலன்ஸ் குறித்த விவரங்கள் உங்களுக்கு வரும். இச்சேவையைப் பெறுவதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

இதுமட்டுமின்றி, epfo வலைப்பக்கத்திலும், உமாங் செயலி மூலமாகவும் பேலன்ஸ் தொகையை அறிந்துகொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Epfo is transferring 8 5 percent interest to pf accounts before diwali

Next Story
மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டினை டவுன்லோட் செய்யும் வழிமுறை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com