/tamil-ie/media/media_files/uploads/2021/09/Epfo-1.jpg)
இன்றளவிலும் சம்பளதாரர்கள் மத்தியில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிக சிறந்த சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பட்சத்தில், உங்களின் சம்பள பணத்தின் ஒரு பகுதி, பிஎஃப்-காக பிடிக்கப்படுகிறது என்றால், இது உங்களுக்கான செய்தி தான்.
EPFO தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதை எளிதாகக் கருதும் பட்சத்தில், உங்களின் மொத்த பணமும் பிஎஃப் கணக்கிலிருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
EPFO தனது 6 கோடி வாடிக்கையாளர்களும் கணக்கு தொடர்பான தகவல்களை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம், பிஎஃப் தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டாம் என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த எச்சரிக்கை குறித்து EPFO ட்வீட் செய்துள்ளது. அதில், " ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களிடம் UAN எண், ஆதார் எண், பான் எண் போன்ற தகவல்களையோ அல்லது வங்கி கணக்கு விவரங்களையோ தொலைப்பேசி அழைப்புகளில் ஒருபோதும் கேட்காது. மேலும், EPFO, தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கால் செய்யும் வழக்கம் கிடையாது" எனக் குறிப்பிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.